செய்திகள் :

Salman Khan: "ரூ. 5 கோடி கொடுக்காவிட்டால்...." - சல்மான் கானுக்கு பிஷ்னோய் கேங்க் கொலை மிரட்டல்

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இக்கொலை மிரட்டல் காரணமாக சல்மான் கான் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடனேயே வெளியில் வருகிறார். அதோடு மும்பை காவல்துறையும் சல்மான் கானுக்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

கடந்த வாரம் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் மும்பையில் அவரது மகன் அலுவலகத்திற்கு வெளியில் படுகொலை செய்யப்பட்டார். சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர்தான் இந்த படுகொலையை நடத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது.

லாரன்ஸ் பிஷ்னோய்

மும்பை போக்குவரத்து காவல் துறையின் வாட்ஸ் ஆப் நம்பருக்கு இந்த மிரட்டல் வந்துள்ளது. அதில், "சல்மான் கான் உடனே 5 கோடி ரூபாய் கொடுக்கவில்லையெனில், பாபா சித்திக்கிற்கு ஏற்பட்டதைவிட மோசமான நிலை அவருக்கு ஏற்படும். இந்த செய்தியைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டாம்." என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே சல்மான் கான் வீட்டின் மீது மர்ம நபர்கள் கடந்த ஏப்ரல் மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன்பிறகு சல்மான் கானை அவரது பண்ணை வீட்டில் வைத்து கொலை செய்யவும் சதி நடந்தது. இச்சதி தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். மேலும், சுக்பிர் பல்பிர் சிங் என்பவரை காவல்துறையினர் தேடி வந்தனர். சுக்பிர் பல்பிர் சிங் ஹரியானா மாநிலம் பானிபட் என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நவிமும்பை காவல்துறையினர் விரைந்து சென்று அவரைக் கைது செய்தனர். சுக்பிர் பல்பிர் சிங்கிடம் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் சல்மான் கான் வீட்டையும், அவரையும் கண்காணிக்க லாரன்ஸ் பிஷ்னோய் 60 பேரை வேலைக்கு நியமித்திருந்தது தெரிய வந்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

SRK: "இறுதி மூச்சு வரை நடிப்பேன்; யாராவது ஆக்‌ஷன் சொல்ல நான் சாக வேண்டும்..." - ஷாருக்கான் விருப்பம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த ஆண்டு நடித்த மூன்று படங்களும் தலா ஆயிரம் கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளன. தற்போது தனது மகள் சுஹானா கான் நடிக்கும் கிங் என்ற படத்தில் ஷாருக்கான் கவனம் செலுத்தி வருகி... மேலும் பார்க்க

Tamannaah: பணமோசடி வழக்கு; 2 மணி நேரம் விசாரிக்கப்பட்ட நடிகை தமன்னா - என்ன நடந்தது?

'HPZ டோக்கன்' எனும் மொபைல் செயலி பிட்காயின், மற்றும் கிரிப்டோகரன்ஸி முதலீடுகள் என்ற போலி விளம்பரம் மூலம் பலரை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வர... மேலும் பார்க்க

Amitabh Bachchan: அமிதாப் பச்சன் வாங்கிய புதிய BMW i7 கார் - விலை எவ்வளவு... சிறப்பம்சம் என்ன?

சமீபத்தில் தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அமிதாப் பச்சன், தனது கராஜில் புதிய கார் ஒன்றை இணைத்துள்ளார்.அது BMW i7 சொகுசு செடான் (3 பெட்டிகள் உள்ள) கார். இது ஒரு எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்ப... மேலும் பார்க்க

Ratan Tata: `ஹாலிவுட் காமெடி திரைப்படங்களின் காதலன்!' - ரத்தன் டாடவின் ஃபேவரைட் படங்கள்!

மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரத்தன் டாடா மாய்ந்திருக்கிறார். அவருக்கு வயது 86.தொழில்துறையில் பல முக்கியமான முன்னெடுப்புகளை சாத்தியப்படுத்திய ரத்தன் டாடா இளைஞர்களுக்கு நம்ப... மேலும் பார்க்க

`குழந்தை நட்சத்திர’ புகழ் சாரா அர்ஜூனுடன் ஜோடி சேரும் ரன்வீர் சிங் - நெட்டிசன் ரியாக்‌ஷன்ஸ்

திரைப்படங்களில் தன்னை விட வயது குறைவான அல்லது தனது மகள் வயதை ஒத்த நடிகைகளுடன் நடிகர்கள் ஜோடி சேர்ந்து நடித்து காதல் டூயட் பாடுவது வழக்கமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. பாலிவுட்டும் அதற்கு விலக்கல்ல. ... மேலும் பார்க்க