செய்திகள் :

TVK: `எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜயகாந்த்...' - நடிகர்களின் அரசியல் பிளாஷ்பேக்

post image
நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடக்கவிருக்கிறது. தமிழ் சினிமா நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது புதிதல்ல. நம் நாட்டில் அரசியலும் சினிமாவும் இரண்டறக் கலந்ததாகவே இருந்துவருகிறது. திராவிடர் முன்னேற்ற கழகத் தலைவர்கள் கூட சினிமா பின்புலத்தில் இருந்து வந்தவர்கள்தான்.

விஜய் ஆதரவாளர்கள், `எம்.ஜி.ஆரைப்போல விஜய் வெல்வார்' என்கின்றனர். விஜய்க்கு முன்னால் பலருக்கும் இந்த எம்.ஜி.ஆர் உதாரணம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அரசியல் களம் விரிக்கும் சிகப்பு கம்பளம் சிலருக்கு நெருப்புக் கம்பளமாகவும் இருந்திருக்கிறது.

அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன் என எம்.ஜி.ஆருக்கு முன்பிருந்தே நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டு வெற்றித் தோல்விகளைச் சந்தித்துள்ளனர்.

Jayalalithaa - MGR

தமிழக மக்களைப் பொறுத்தவரையில் நடிகர்கள் மீதான பார்வை காலத்தின்பால் மாறிக்கொண்டே இருக்கிறது. திரையில் பார்க்கும் நடிகரின் குணாதிசியங்கள்தான் அவரது உண்மையான குணாம்சங்கள் என எண்ணும் மக்கள் சமூக வலைத்தள காலத்தில் கிடையாது.

எம்.ஜி.ஆராக தன்னை நினைச்சுகிட்டார், எம்.ஜி.ஆராக நின்றார், எம்.ஜி.ஆராக மாறினார் என சந்திரமுகி பாணி வெற்றி எல்லாம் அரசியலில் எடுபடுவதில்லை. அதேவேளையில், தனிப் பாணியுடன் அரசியலில் நிலைத்து நின்ற நடிகர்கள் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.

தமிழ்நாடு அரசியலை வடிவமமைத்ததில் காலாகாலமாக நடிகர்களின் குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது. எந்தெந்த நடிகர்கள் அரசியல் திசைவழியில் எப்படி பயணித்திருக்கின்றனர் என்பதை ஒரு ஃப்ளாஷ்பேக்காக பார்க்கலாம்!

சட்டமன்றத் தலைவரான முதல் நடிகர்

தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து அரசியலிலும் கால் பதித்து தேர்தலில் வெற்றிபெற்றார் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இந்தியாவிலேயே நடிகராக இருந்து சட்டமன்றத்துக்குள் நுழைந்த முதல் நபர் இவர்தான்.

நாடகங்களில் நடிக்கத்தொடங்கி சினிமாவுக்குள் நுழைந்தவர் ராஜேந்திரன். கலைஞர் எழுத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பராசக்தி படத்தில் சிவாஜி கணேசனுக்கு அண்ணனாக நடித்தவர் ராஜேந்திரன். முதலாளி (1957) என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்.

1962ம் ஆண்டு திராவிடர் முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் எம்.பி ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

SS Rajendran

ராஜேந்திரன் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றினார். 'எவ்வித புராண கதாப்பாத்திரங்களிலும் நடிக்க மாட்டேன்' என உறுதியாக இருந்தார். பின்னாளில் எம்.ஜி.ஆரின் அதிமுகவில் இணைந்த ராஜேந்திரன் ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருந்தார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு சிலகாலம் தனிக் கட்சித் தொடங்கி செயல்பட்டவர், பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்தார். அதன்பிறகு திருநாவுக்கரசுடன் இணைந்து செயல்பட்டவர், இறுதிக் காலத்தில் அரசியலில் இருந்து விலகியிருந்தார்.

திராவிட இயக்கமும் தமிழ் சினிமாவும்

முன்பு கூறியதுபோல திமுகவின் தலைவர்கள் பலரும் சினிமா பின்னணி உடையவர்கள். தமிழ் சினிமாவின் தொடக்ககாலத்தில் தமிழ் பின்னணியில் படங்கள் அதிகம் வந்ததில்லை. 1950களில் சொர்க்க வாசல், வேலைக்காரி, நல்லதம்பி, மந்திரி குமாரி, ஓரிரவு, பராசக்தி, திரும்பிப்பார், மனோகரா என அண்ணா, கலைஞர் எழுதிய திரைப்படங்கள்தான் தமிழ்சினிமாவுக்கு தனித்த முகத்தை வழங்கின.

'வேலைக்காரி', 'குமஸ்தவின் பெண்' போன்ற படங்களில் நடித்தவர் கே.ஆர்.ஆர். கும்பகோணம் ராமபத்ர ராமசாமி என்ற இவர் அண்ணாவுடனும் எம்.ஜி.ஆருடனும் நெருங்கிய தோழமை பாராட்டியவர்.

புராண கதாப்பாத்திரங்களில் நடிப்பதில்லை என்று உறுதியேற்றிருந்த கே.ஆர்.ஆர். திராவிட இயக்கக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பல நாடகங்களையும் நடத்தினார்.

கருணாநிதி - அண்ணா

திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் சினிமாவில் தாக்கம் ஏற்படுத்தும் வல்லமையோடு இருந்தாலும், ஆரம்பத்தில் வந்ததுபோல அரசிய கருத்தாழமிக்க திரைப்படங்கள் பின்னாட்களில் வரவில்லை. ஆனாலும் பல நடிகர்கள் திமுகவுக்கு ஆதரவு அளித்தனர்.

எம்.ஜி.ஆரின் பிரபல்யத்தை முழுமையாக பயன்படுத்திக்கொண்டது திமுக. எம்.ஜி.ஆர் என்ற பிம்பம் தேர்தலில் வெற்றிபெற உதவியது.

சிவாஜி கணேசன் முதல் விஜய் வரை

திராவிடர் கழகம் மட்டுமல்லாமல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி அரசியலிலும் பல நடிகர்கள் ஈடுபட்டுள்ளனர். ரஜினிகாந்த் உட்பட பலர் திரைத்துறையில் இருந்தபடி தேர்தலில் சில கட்சிகளுக்கு ஆதரவாகப் பேசியிருக்கின்றனர்.

ஆனால் தனியாக கட்சித் தொடங்கி களத்தில் இறங்கியவர்கள் சிலரே. சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், கருணாஸ், கமல்ஹாசன், மன்சூர் அலிகான், விஜய் என இந்தப் பட்டியலை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

சிவாஜி

சிவாஜியின் தனிக்கட்சி:

கருணாநிதியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக எம்.ஜி.ஆர் தனிக் கட்சி அமைத்ததை நாம் அறிவோம். முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்ற அவர் 11 ஆண்டுகள் தமிழக முதல்வராக திகழ்ந்தார்.

சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு போட்டியாளராக கருதப்பட்ட சிவாஜி கணேசன், ஆரம்பத்தில் இவரும் திமுக அபிமானியாக இருந்தார். பின்னர் காங்கிரஸில் இணைந்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகான அதிமுக-காங்கிரஸ் கூட்டணி பிரச்னையால் 1989ம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் தொடங்கினார். ஒரே ஒரு தேர்தல் தோல்வியுடனேயே அவரது கட்சி களைக்கப்பட்டது.

சிவாஜி கட்சி ஆரம்பித்த அதே ஆண்டு எம்.ஜி.ஆரின் தீவிரபக்தனாக அறியப்பட்ட நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால் பின்னாட்களில் கட்சியை அதிமுக உடன் இணைத்துக்கொண்டார்.

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமையால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார் டி.ராஜேந்தர். 1991-ல் தி.மு.க தலைமையோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதிலிருந்து பிரிந்து தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார்.

டி.ஆர்.

 இவரது கட்சி 1991 சட்டமன்றத் தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்டு, அதில் 2 இடங்களில் வென்றது. 1996-ல் தி.மு.க-விலிருந்து பிரிந்து வைகோ ம.தி.மு.க-வைத் தொடங்கிய பின்னர், தி.மு.க-வோடு இணைந்தார். தேர்தலில் போட்டியிட்டு வென்று தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார். தி.மு.க-வில் கொள்கைபரப்புச் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.  2004-ல் தி.மு.க-விலிருந்து விலகி, `அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது கட்சியை செயல்படாத கட்சியாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.

சரத்குமார் -கார்த்திக்

திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாறி மாறி ஆதரவளித்துவந்த சரத்குமார் 2007ம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டார்.

நடிகர் முத்துராமனின் மகனும், நடிகருமான கார்த்திக்கும் சினிமா புகழ் வெளிச்சத்திலிருந்தபோதே `அனைத்திந்திய பார்வார்டு பிளாக்’ கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று அரசியலில் நுழைந்தார். அதன் பிறகு நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கினார். பின்பு அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு `மனித உரிமை காக்கும் கட்சி' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார். ஆனால், தற்போது அரசியலில் இருந்து விலகியிருக்கிறார்.

விஜயகாந்த்

விஜயகாந்த்தின் வளர்ச்சி:

அரசியல் கட்சி ஆரம்பித்த நடிகர்களுள் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கவனிக்கத்தக்க வெற்றியைப் பெற்றவர் விஜயகாந்த். 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தைத் தொடங்கினார். தனித்து நின்று தன் வாக்கு சதவிகிதத்தை போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே நிரூபித்துக்காட்டியவர். அ.தி.மு.வுடன் கூட்டணி அமைத்து 2011ம் ஆண்டு எதிர்கட்சித் தலைவராக உயர்ந்தார். அவரது மறைவுக்குப் பிறகு மனைவி மற்றும் மகன் கட்சியை கவனித்து வருகின்றனர்.

இயக்குநரும் நடிகருமான சீமான் ஆரம்ப காலத்தில் இருந்தே அரசியலும் பேசிவந்தார். 2010ம் ஆண்டு நாம் தமிழர் கட்சிக்குத் தலைமை தாங்கி, தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்தார். தமிழகத்தில் சமகாலத்தில் தமிழ் தேசிய அரசியல் பேசும் கட்சிகளில் அதிக வாக்குகளை வாங்கும் கட்சியாக நாம் தமிழர் திகழ்கிறது.

சீமானின் கட்சியில் இருந்து விலகிய மன்சூர் அலிகான், தமிழ் தேசியப் புலிகள் என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

நடிகர் கருணாஸ் 2011ம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியைத் தொடங்கினார். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இவரது கட்சி திமுகவுக்கு ஆதரவளித்தது.

கமல், விஜய், சீமான்

2018 ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்தது இவரது கட்சி.

இத்தனை நடிகர்களுக்குப் பிறகு சொந்த கட்சித் தொடங்கியிருக்கிறார் விஜய். அரசியலுக்காக சினிமாவைத் துறப்பதாகவும் அறிவித்திருக்கிறார். இதோ முதல் மாநாட்டையும் நடத்தவிருக்கிறார்.

அவரது முடிவு மேற்கண்டவர்களைப் போல இருக்குமா அல்லது இனி அரசியல் கட்சி தொடங்கும் நடிகர்கள் எம்.ஜி.ஆருக்கு பதிலாக, 'விஜய் போல வெல்வோம்' எனக் கூறும் விதமாக அமையுமா என்தைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்...

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுவது உறுதி' - அடித்துச் சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

வருகின்ற 30-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறுகின்ற முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில், நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்தை வங்கி லாக்... மேலும் பார்க்க

Irfan : வீடியோ சர்ச்சை; வெளிநாட்டில் யூடியூபர் இர்ஃபான்... சென்னை திரும்பியதும் நடவடிக்கை பாயுமா?!

தனது மனைவியின் பிரவசத்தையும், குழந்தையின் தொப்புள்கொடியை தானே வெட்டுவதும் போன்ற சர்ச்சை வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் யூடியூபர் இர்ஃபான் வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பி... மேலும் பார்க்க

TVK: விஜய் உடன் இணைகிறாரா சகாயம்?! - வெளியான தகவலும் பின்னணியும்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில், வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. தனது கட்சித் தொண்டர்களுக்கு இதுவரை மூன்று கடிதங்கள் எ... மேலும் பார்க்க

புதுச்சேரி: "தவறு செய்யும் சுற்றுலாப் பயணிகளை விட்டுவிடலாமா?" – முதல்வர் கருத்தும், அமைச்சர் பதிலும்

சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்குத் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை மாலை வரும் அவர்கள், ப... மேலும் பார்க்க

TVK: இறுதிக்கட்டத்தில் தவெக மாநாட்டு வேலைகள்... பார்வையிட்ட புஸ்ஸி ஆனந்த் | Photo Album

தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்... மேலும் பார்க்க