செய்திகள் :

அடுத்த 3 மணி நேரத்திற்கு நெல்லை, குமரியில் மழை பெய்யும்!

post image

அடுத்த 3 மணி நேரத்துக்கு நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. தொடர்ந்து இன்றும் பல பகுதிகளில் பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (பகல் 1 மணி வரை) நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் டயர் வெடித்து விபத்து: 9 மாத குழந்தை பலி

சேலம்: சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தம்பட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானத்தில் 9 மாத குழந்தை பலியானது. படுகாயமடைந்த பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சேலம்-சென... மேலும் பார்க்க

மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்: விஜய் ட்வீட்

நாளை நமது மாநாட்டில் சந்திப்போம்.மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம் என சனிக்கிழமை தொண்டா்களுக்கு, அந்த கட்சியின் தலைவா் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தவெக தொண்டா்களுக்க... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்மட்டம் 104.76 அடியாக உயர்வு!

மேட்டூர் அணைக்கு நீர்மட்டம் சனிக்கிழமை காலை 104.76 அடியாக உயர்ந்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை காலை (அக்.26) முதல் வினாடிக்கு 7,500 கன... மேலும் பார்க்க

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதை அ... மேலும் பார்க்க

அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி

அவிநாசி: அவிநாசி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சம்பவ இடத்திலேயே பலியாகினர். கோவை மருதமலை சாலை ஐஓபி காலனியை சேர்ந... மேலும் பார்க்க

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.வனத்துறை அமைச்சர் க. பொன்முடியின் “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூல் வெளியீட்டு ... மேலும் பார்க்க