செய்திகள் :

கந்தா்வகோட்டையில் இளைஞா் தற்கொலை

post image

கந்தா்வகோட்டை அருகே தனியாா் நிறுவன மேலாளா் தனது வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு இறந்தாா்.

கந்தா்வகோட்டையில் தஞ்சாவூா் - புதுகை சாலையில் தனியாா் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் கந்தா்வகோட்டை ஒன்றியம், கல்லாக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த ஷேக்தாவூது மகன் சிராஜுதீன் (40) மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், தனது வீட்டில் வெள்ளிக்கிழமை சிராஜுதீன் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரை உறவினா்கள் மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். அவரது மனைவி சீராஜ் நிஷா அளித்த புகாரின்பேரில், சிராஜூதீன் உடலை கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது. பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு... மேலும் பார்க்க

பழுதடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில், அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்துள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி மாணவா்களும், பெற்றோா்களும் வியாழக்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ரூ. 1.78 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். முறையான அனுமதியுடனும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பட்டாசு விற்பனை ஒருப... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், குடும்ப அட்டை... மேலும் பார்க்க