செய்திகள் :

கேமரூன் கிரீன் அணியில் இல்லாதது ஆஸி.க்கு பாதிப்பை ஏற்படுத்துமா? மிட்செல் ஸ்டார்க் பதில்!

post image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீன் இல்லாததால் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு திட்டங்களில் மாற்றம் இருக்கும் என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையும் படிக்க: நியூசி. வீரர் ரச்சின் சதத்துக்கு பெங்களூரு ரசிகர்கள் கொண்டாட்டம்!

பந்துவீச்சு திட்டங்களில் மாற்றம்

முதுகுப்பகுதி காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ள கேமரூன் கிரீன் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் அணியில் இல்லாததால் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு திட்டங்களில் மாற்றம் இருக்கும் என மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கேமரூன் கிரீனைப் போன்ற ஆல்ரவுண்டர் அணியில் இல்லாதது அணிக்கு பெரிய இழப்பு. இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இல்லாதபோது அந்த அணி அதற்கேற்றவாறு செயல்பட வேண்டிய நிலைக்கு ஆளானது. ஆல்ரவுண்டர் ஒருவர் அணியில் இடம்பெற முடியாத சூழலில் அணியில் கூடுதல் பந்துவீச்சு தெரிவுகள் இருக்க வேண்டும்.

இதையும் படிக்க: 1,338 நாள்களுக்குப் பின் சொந்த மண்ணில் பாக். வெற்றி! 20 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2 வீரர்கள்!

ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சில் எந்த மாதிரியான மாற்றங்கள் இருக்கப் போகிறது எனத் தெரியவில்லை. மிட்செல் மார்ஷ் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என்ற ஆலோசனை சென்று கொண்டிருக்கிறது. அவர் பந்துவீச்சிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஆஸ்திரேலியாவில் விளையாடுவது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. கடந்த காலங்களில் அணியில் ஆல்ரவுண்டர் வீரர் இல்லாமலே விளையாடியுள்ளோம். பந்துவீச்சாளர்கள் சிறிது அதிகமான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். நாதன் லயன் சிறிது அதிகமான ஓவர்களை வீச வேண்டியிருக்கும் என்றார்.

முதல் டெஸ்ட்: மூவர் அரைசதம்; சரிவிலிருந்து மீண்டு வரும் இந்திய அணி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற... மேலும் பார்க்க

பாபர் அசாமுக்கு மாற்று வீரராக களமிறங்கியவர் அசத்தல்; பாகிஸ்தான் கேப்டன் பாராட்டு!

இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடிய அறிமுக வீரர் கம்ரான் குலாமை பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் பாராட்டியுள்ளார்.பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகி... மேலும் பார்க்க

நியூசி. வீரர் ரச்சின் சதத்துக்கு பெங்களூரு ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் அக்டோபர் 16இல் தொடங்கியது. மழையால் முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.2ஆம் நாளில் பேட்டிங் செய... மேலும் பார்க்க

1,338 நாள்களுக்குப் பின் சொந்த மண்ணில் பாக். வெற்றி! 20 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2 வீரர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 152 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது.... மேலும் பார்க்க

மே.இ.தீவுகளை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும... மேலும் பார்க்க