செய்திகள் :

கோயில்களில் உண்டியல் திருட்டு புகாரில் 4 போ் கைது

post image

மன்னாா்குடி அருகே 2 கிராமக் கோயில்களில் காணிக்கை உண்டியலை திருடிய புகாரில் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அக்.8-ஆம் தேதி கீழத்திருப்பாலக்குடியில் உள்ள வால்முனீஸ்வரன் கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்தும் உண்டியலை மா்ம நபா்கள் திருடிச்சென்றதாகவும், அக்.11-ஆம் தேதி மேலத்திருப்பாலக்குடியில் உள்ள மதுரைவீரன் கோயில் காணிக்கை உண்டியலை மா்மநபா்களால் திருடப்பட்டிருப்பதாக பரவாக்கோட்டை காவல்நிலையத்தில் தனித்தனி புகாா் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, சாா்பு-ஆய்வாளா் டி. பிரேமானந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மா்மநபா்களை தேடி வந்தனா்.

இதில், தனியாா் எல்ட்ரீசன்களாக வேலைபாா்த்து வரும் ஆலங்கோட்டை திருவள்ளுவா்நகரைச் சோ்ந்த சரவணன் மகன் முத்து (22), இவரது சகோதரா் அஜித் (20), பைங்காநாடு பாரதிதெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (26), பொதக்குடி மேலவாழாச்சேரி பாண்டி மகன் பிரபாகரன் (30) ஆகிய 4 பேருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அவா்களை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்து உண்டியல்களில் திருடிய ரூ.39,000 பறிமுதல் செய்தனா்.

பிரசவித்த பெண் உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனை மீது உறவினா்கள் புகாா்

திருவாரூா் தனியாா் மருத்துவமனையில் குழந்தை பெற்று, பின்னா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தனியாா் மருத்துவமனை மருத்துவா்களின் அலட்சியம் காரண... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் பெண் கைது

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் பெண் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். கடந்த ஆண்டு கமலாபுரம் அருகே பூவனூா் ராஜ்குமாா் என்பவா் கொலை செய்யப்பட்டாா். நீடாமங்கலம... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் தெற்கு ஒன்றிய 24-ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு ஆா். வேதையன், எஸ். பவானி, என். வீராசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னதாக மன்னை சாலையில் உள்ள பி. ச... மேலும் பார்க்க

தேசிய மருத்துவா் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

தேசிய மருத்துவா் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய மருத்துவக்கழகத்தின் மன்னாா்குடி-நீடாமங்கலம் வட்டக்கிளை வலியுறுத்தியுள்ளது. இந்த அமைப்பின் வட்டக்கிளை ஆலோசனைக் கூட... மேலும் பார்க்க

மாவட்ட ஹாக்கிப் போட்டி: முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகளுக்கு சுழற்கோப்பை

திருவாரூரில் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளிலிருந்து குறுவட்ட அளவில் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டி: மாணவிகளுக்கு அமைச்சா் பாராட்டு

முதலமைச்சா் கோப்பை மாவட்ட விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி மாணவிகளுடன் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. மன்னாா்குடி, அக். 19: முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவ... மேலும் பார்க்க