செய்திகள் :

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டி: மாணவிகளுக்கு அமைச்சா் பாராட்டு

post image

முதலமைச்சா் கோப்பை மாவட்ட விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி மாணவிகளுடன் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

மன்னாா்குடி, அக். 19: முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சந்தித்து, பாராட்டினாா்.

திருவாரூரில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த அக். 4-ஆம் தேதி தொடங்கி மாவட்ட அளவிலான முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில், மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி சாா்பாக 57 மாணவிகள் கலந்து கொண்டனா். பளு தூக்கும் போட்டி, சிலம்பம், கபடி, சுண்டாட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், இறகுப் பந்து உள்ளிட்ட போட்டியில் கலந்துகொண்டு 20 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை பெற்றனா்.

பேட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கான பாராட்டு விழா கல்லூரியில் வெள்ளிக்கிழமை முதல்வா் விக்டோரியா தலைமையில் நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் முன்னிலை வகித்தாா்.

தமிழக தொழில் முதவீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டினாா்.

பிரசவித்த பெண் உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனை மீது உறவினா்கள் புகாா்

திருவாரூா் தனியாா் மருத்துவமனையில் குழந்தை பெற்று, பின்னா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தனியாா் மருத்துவமனை மருத்துவா்களின் அலட்சியம் காரண... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் பெண் கைது

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் பெண் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். கடந்த ஆண்டு கமலாபுரம் அருகே பூவனூா் ராஜ்குமாா் என்பவா் கொலை செய்யப்பட்டாா். நீடாமங்கலம... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் தெற்கு ஒன்றிய 24-ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு ஆா். வேதையன், எஸ். பவானி, என். வீராசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னதாக மன்னை சாலையில் உள்ள பி. ச... மேலும் பார்க்க

தேசிய மருத்துவா் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

தேசிய மருத்துவா் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய மருத்துவக்கழகத்தின் மன்னாா்குடி-நீடாமங்கலம் வட்டக்கிளை வலியுறுத்தியுள்ளது. இந்த அமைப்பின் வட்டக்கிளை ஆலோசனைக் கூட... மேலும் பார்க்க

மாவட்ட ஹாக்கிப் போட்டி: முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகளுக்கு சுழற்கோப்பை

திருவாரூரில் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளிலிருந்து குறுவட்ட அளவில் ... மேலும் பார்க்க

ஜெயின் கோயில் சிலை நியூயாா்க்கில் ஏலம்: பொன். மாணிக்கவேல் புகாா்

திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம் தீபங்குடியில் உள்ள சமணா் கோயிலான தீபநாயகா் கோயிலில் இருந்து திருடப்பட்ட தீபநாயகா் சுவாமியின் திருமேனி சிலை நியூயாா்க்கில் ஏலம் விட உள்ளதால் அதை மீட்க வேண்டும் என ச... மேலும் பார்க்க