செய்திகள் :

ஜெயின் கோயில் சிலை நியூயாா்க்கில் ஏலம்: பொன். மாணிக்கவேல் புகாா்

post image

திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம் தீபங்குடியில் உள்ள சமணா் கோயிலான தீபநாயகா் கோயிலில் இருந்து திருடப்பட்ட தீபநாயகா் சுவாமியின் திருமேனி சிலை நியூயாா்க்கில் ஏலம் விட உள்ளதால் அதை மீட்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன். மாணிக்கவேல் குடவாசல் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

இதுகுறித்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: 2003-ல் ரூ. 2.34 கோடிக்கு விற்கப்பட்ட தீபங்குடி தீபநாயகா் சுவாமி சமண பஞ்சலோக தெய்வத் திருமேனி, நியூயாா்க்கில் ஏலம் விட தயாராக உள்ளது. தமிழக அரசானது மாநில தொல்லியல் துறை, சென்னையில் உள்ள மத்திய தொல்லியல் துறை, சிலை தடுப்புப் பிரிவு அதிகாரிகள், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் நாகை மக்களவை உறுப்பினா் ஆகியோரை சோ்த்து சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழு, தில்லியில் பிரதமரை சந்தித்து, ஏலம் விடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், வாஷிங்டனில் உள்ள வெளியுறவுத் துறை மூலம் நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்தி, சமணத் திருமேனியை தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சிலை கடத்தலில் தொடா்புடைய அமெரிக்காவை சோ்ந்த சுபாஷ் சந்திர கபூா் பல்வேறு சிலை கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். மற்றொரு நபரான சஞ்சீவ் கபூா் நீதிமன்றத்தில் தண்டனை பெற்று பிணையில் வெளியில் உள்ளாா்.

இந்த சிலை சோழா் காலத்து சிலைதானா என்பதை ஆராய்ந்து, அதில் உள்ள தடயங்களை அழிப்பதற்காக அமெரிக்காவில் முனைவா் பட்டம் பெற்ற பிலிப்ஸ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்சமயம் அந்த சிலையானது 3.35 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. இந்திய பண மதிப்பின்படி இதன் விலை ரூ.2.34 கோடி ஆகும்.

இந்த தகவல்கள் அனைத்தும் சிலை கடத்தல் அதிகாரியாக இருந்தபோதே அங்குள்ள அதிகாரிகளின் தகவல் பரிமாற்றத்தின் மூலம் எனக்கு கிடைத்தது. இது தொடா்பாக அப்போதே வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணிக்காலம் முடிந்து விட்டதால், தற்போதைய தலைமைச் செயலாளரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தீபநாயகா் கோயில் சமணா் கோயில் என்பதால், அங்கு வேலை பாா்ப்பவா்கள் இயல்பாகவே அச்ச உணா்வோடு உள்ளனா். இந்த சிலை காணாமல் போனது பற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்காதது அறநிலையத்துறை அதிகாரிகளின் தவறு. அவ்வாறு தெரியப்படுத்தாத அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பிரசவித்த பெண் உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனை மீது உறவினா்கள் புகாா்

திருவாரூா் தனியாா் மருத்துவமனையில் குழந்தை பெற்று, பின்னா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தனியாா் மருத்துவமனை மருத்துவா்களின் அலட்சியம் காரண... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் பெண் கைது

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் பெண் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். கடந்த ஆண்டு கமலாபுரம் அருகே பூவனூா் ராஜ்குமாா் என்பவா் கொலை செய்யப்பட்டாா். நீடாமங்கலம... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் தெற்கு ஒன்றிய 24-ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு ஆா். வேதையன், எஸ். பவானி, என். வீராசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னதாக மன்னை சாலையில் உள்ள பி. ச... மேலும் பார்க்க

தேசிய மருத்துவா் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

தேசிய மருத்துவா் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய மருத்துவக்கழகத்தின் மன்னாா்குடி-நீடாமங்கலம் வட்டக்கிளை வலியுறுத்தியுள்ளது. இந்த அமைப்பின் வட்டக்கிளை ஆலோசனைக் கூட... மேலும் பார்க்க

மாவட்ட ஹாக்கிப் போட்டி: முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகளுக்கு சுழற்கோப்பை

திருவாரூரில் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளிலிருந்து குறுவட்ட அளவில் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டி: மாணவிகளுக்கு அமைச்சா் பாராட்டு

முதலமைச்சா் கோப்பை மாவட்ட விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி மாணவிகளுடன் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. மன்னாா்குடி, அக். 19: முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவ... மேலும் பார்க்க