செய்திகள் :

கோவை: அதிவேகமாக மரத்தில் மோதிய கார் - 4 இளைஞர்களை காவு வாங்கிய பிறந்தநாள் கொண்டாட்டம்

post image

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் (20). இவர் கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள வாட்டர் வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சபரி அய்யப்பன் (21), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (22) ஆகியோரும் அதே வாட்டர் வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

கோவை

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அகத்தியன் (20), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் (19) வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். இவர்கள் 5 பேரும் நண்பர்கள் ஆவர்.

நேற்று ஹரீஷுக்கு பிறந்தநாள். இதனால் நண்பர்கள் 5 பேரும் அவரின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக வாட்டர் வாஷுக்காக வந்த ஒரு காரில், நேற்று இரவு ஐந்து பேரும்  சென்றுள்ளனர். பிரகாஷ் காரை ஓட்டியுள்ளார். அப்போது அவர்கள் மது அருந்திவிட்டு காரில் அதிவேகமாக பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

கோவை கார் விபத்து

கார் பேரூர் பச்சாபாளையம் அருகே செட்டிப்பாளையம் பிரிவை கடந்த போது, அவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்தது. எதிரில் வந்த ஒரு வாகனத்துக்கு அவர்கள் வழி விட முயற்சி செய்துள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்து கார், சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மோதியது. கார் அதிவேகமாக சென்று புளியமரம் மற்றும் அதன் அருகில் இருந்த மேஜையில் மோதியது. இதில் காரில் இருந்த ஏர்பேக் ஓபன் ஆனது. அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சி செய்தனர்.

கோவை கார் விபத்து

ஆனால் பிரகாஷ், ஹரீஷ், சபரி அய்யப்பன், அகத்தியன் ஆகிய 4 சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பிரபாகரன் உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்ஸ்டாவில் வேறு நபருடன் பழக்கம்? - 9 ஆண்டு காதலியை குத்தி குத்திக் கொன்று தற்கொலை செய்த வாலிபர்

மும்பை பரேல் பகுதியை சேர்ந்தவர் சோனு(24). வேலை இல்லாத சோனு ஏதாவது கேட்டரிங் வேலைகளுக்கு செல்வது வழக்கம். இவர் அதே பகுதியில் வசிக்கும் மனிஷா யாதவ்(24) என்ற பெண்ணை கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தார். ம... மேலும் பார்க்க

கோவை: `பல பெண்களுடன் தொடர்பு; முதல் திருமணத்தை மறைத்து.!’- காவலர் மீது புகார் அளித்த மனைவி

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா தேவி (26) . இவர் கோவை டிஜிபி அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அந்த மனுவில், “எனக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு போத்தனூர் காவல் நிலையத்த... மேலும் பார்க்க

`சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டவில்லை; பணமும் பறிக்கவில்லை' - ரியாவுக்கு சிபிஐ நற்சான்று

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இத்தற்கொலைக்கு சுஷ... மேலும் பார்க்க

``வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.3 லட்சம்'' - கையும் களவுமாக சிக்கிய நாகர்கோவில் இன்ஸ்பெக்டர்

நேசமணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜன் என்ற சந்தை ராஜன் என்பவர் மீது நேசமணி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது. அந்த வழக்கில் இருந்து சந்தை ரா... மேலும் பார்க்க

4 முறை வன்கொடுமை செய்த எஸ்.ஐ - தற்கொலைக்கு முன் பெண் மருத்துவர் கையில் எழுதியிருந்த அதிர்ச்சி வரிகள்

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா அருகில் உள்ள பல்டன் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 28 வயது பெண் டாக்டர் தனது விடுதியில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன்பு தனது தற்கொலைக்கு காவல் உ... மேலும் பார்க்க

ஏஐ தொழில்நுட்பத்தில் பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பிய இளைஞர் - கோவையில் அதிர்ச்சி

கோவை கேகே புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (24). இவர் ஆட்டோமொபைல் தொடர்பான ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மணிகண்டன் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்தார். அதில் பல பெண்களை அவர் பின்தொடர்ந்துள்... மேலும் பார்க்க