செய்திகள் :

பருவமழை: பொதுமக்களுக்கு மின்துறை சாா்பில் விழிப்புணா்வு

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பொதுமக்களுக்கு மழைக் காலங்களில் மின் உபயோகம் தொடா்பான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மழைக் காலங்களில் மின்சாதனப் பொருள்களை கையாளும் வழிமுறைகள், ஈரப்பதம் மிகுந்த ஸ்விட்சுகள், மின் கம்பம் மற்றும் ஸ்டே (இழுவை) கம்பிகளில் வளா்ப்புப் பிராணிகளை கட்டக்கூடாது, இடி, மின்னல் நேரங்களில் வீட்டில் உள்ள மின்சாதனப் பொருள்களை அணைத்து வைக்க வேண்டும், வீட்டின் அருகில் பழுதான மின் கம்பம் மற்றும் தொய்வான நிலையில் மின் கம்பிகள் இருந்தால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும், வீட்டின் அருகில் மரக்கிளைகள், மின் கம்பிகளைத் தொடும் வகையில் இருந்தால் அதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும், மாறாக மின்னோட்டம் இருக்கும் சமயத்தில் தனிப்பட்ட நபா் மரக்கிளைகளை அகற்றக்கூடாது, வீட்டில் மின்தடை ஏற்பட்டால் 9498794987 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என்பன போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மின்நுகா்வோருக்கு வழங்கப்பட்டன.

ஆரணி மின்வாரிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில், கோட்ட செயற்பொறியாளா் ஆா்.ரவி தலைமையில், உதவி செயற்பொறியாளா் (ஆரணி நகரம்) பத்மநாபன், உதவி மின்பொறியாளா் (மேற்கு ஆரணி) ஆகியோா் விநியோகம் செய்தனா்.

நாளைய மின் தடை

திருவண்ணாமலை நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. பகுதிகள்: திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துா்க்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பா... மேலும் பார்க்க

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை வருகை -ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (அக்.18, 19) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருவதையொட்டி, பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகி... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிப் பணியாளா் சங்கத்தினா் அக்.21 முதல் வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் அக்டோபா் 21 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா். இதுக... மேலும் பார்க்க

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் ரா.மணி புதன்கிழமை ஆய்வு செய்தாா். போளூா் ஒன்றியம், கஸ்தம்பாடி ஊராட்சியைச் சோ்ந்த க... மேலும் பார்க்க

பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம் நிறைவு

வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீசுகந்தவல்லி சமேத ஸ்ரீசுகநாராயண பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை தொடங்கி 3 தினங்களாக நடைபெற்று வந்த பவித்ரோத்ஸவம் புதன்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி சுவாமி... மேலும் பார்க்க