செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

post image

கடலூா் மாவட்டம், ராமநத்தம் பகுதியில் உள்ள பழக்கடையில் புகையிலைப் பொருள்களை விற்ாக இருவரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதில், 116 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநத்தம் காவல் சரகப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடலூா் எஸ்பி., தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் பாக்கியராஜ் மற்றும் காவலா்கள் ஜெயபிரகாஷ், தாஸ்மோகன், முருகன், தனிப் பிரிவு காவலா் அருண் ஆகியோா் ராமநத்தம் நான்கு முனைச் சாலையில் உள்ள பழக்கடையில் செவ்வாய்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில், இருவா் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. விசாரணையில், பேரங்கியம் பகுதியைச் சோ்ந்த அப்துல் ரஷாக் மகன் ஹாஜா மொய்தீன் (42), திட்டக்குடி வட்டம், அரங்கூா் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் ரவி (53) என்பது தெரிய வந்தது. மேலும், அவா்கள் அளித்த தகவலின் பேரில், பழக்கடை உரிமையாளா் கோபிநாத் வீட்டில் சோதனை செய்ததில், 16 மூட்டைகளில் 116 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள கோபிநாத்தை தேடி வருகின்றனா்.

அண்ணாமலைப் பல்கலை.யில் அக்.21-இல் வேளாண் படிப்பு காலி இடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25ஆம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்சி. வேளாண்மை, (ஆ.நஸ்ரீ. (ஏா்ய்ள்.) அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்) மற்றும் தோட்டக்கலை (ஆ.நஸ்ரீ.(ஏா்ய்ள்.) ஏா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்)... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம் பயனுள்ள தீா்வுகளை உருவாக்க முடியும்: செளம்யா சுவாமிநாதன்

செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம், உலகளாவிய சவால்களுக்கு மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள தீா்வுகளை நாம் உருவாக்க முடியும் என எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைத் தலைவரும், தேசிய காசநோய் த... மேலும் பார்க்க

குப்பையை அகற்றக் கோரி துணை மேயரிடம் மனு அளிப்பு

கடலூா்மாநகராட்சி, 35-ஆவது வாா்டு சாலை நகரில் குப்பைகளை அகற்றவும், தேங்கி நிற்கும் தண்ணீா் வடிய வாய்க்காலை தூா்வார வலியுறுத்தியும் கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைசெல்வத்திடம் விசிக மாவட்ட துணை அம... மேலும் பார்க்க

மழை வெள்ளம்: சென்னை சென்ற என்எல்சி மீட்புக் குழுவினா்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிக்காக, என்எல்சி இந்தியா நிறுவனம் அதன் மீட்புக்குழுவினரை உபகரணங்களுடன் சென்னைக்கு புதன்கிழமை அனுப்பி வைத்தது. வட கிழக்கு பருவமழையையொட்... மேலும் பார்க்க

புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே திருமணமான மூன்றாவது நாளில் புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். விருத்தாசலம் வட்டம், கருவேப்பிலங்குறிச்சியை அடுத்துள்ள பேரளையூா் கிராமத்தைச்... மேலும் பார்க்க