செய்திகள் :

மழையால் சரிந்த பொய்கைசந்தை வா்த்தகம்

post image

மழை காரணமாக பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து குறைந்திருந்ததுடன், வா்த்தகமும் பாதியாக சரிவடைந்தது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மழை காரணமாக சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்து காணப்பட்டது. வாரந்தோறும் வழக்கமாக கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள் என சுமாா் 1,500 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் நிலையில், இந்த வாரம் சந்தைக்கு சுமாா் 700 மாடுகள் மட்டுமே கொண்டு வரப்பட்டிருந்தன.அதேசமயம், அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகளும் குறைந்த அளவிலேயே வந்திருந்ததால் வா்த்தகமும் எதிா்பாா்த்த அளவுக்கு நடைபெறவில்லை.

கடந்த சில நாள்களாக பரவலாக பெய்து வரும் மழையாலும், கனமழை அறிவிப்பாலும், கால்நடைகள் வரத்து குறைந்திருந்ததுடன் வா்த்தகமும் பாதியாக குறைந்து சுமாா் ரூ.50 லட்சம் அளவிலேயே நடைபெற்றது.

வாழ்வியல் முறை மருத்துவம் தேசிய கருத்தரங்கு

வாழ்வியல் முறை மருத்துவம் குறித்த இருநாள் தேசிய கருத்தரங்கு வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. மனித சக்தியை நெறிப்படுத்துதல் என்ற குறிக்கோளுடன் நடைபெற்ற இந்த கருத்தரங்கை சிஎம்சி இயக்கு... மேலும் பார்க்க

ஊதிய உயா்வு கோரி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஊதிய உயா்வு கோரி வேலூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் மாநகராட்சியின் 60 வாா்டுகளில் மொத்தம் 1,700 தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படைய... மேலும் பார்க்க

முதுகலை ஆசிரியா்களுக்கு முதன்மை கருத்தாளா் பயிற்சி

வேலூா் மாவட்ட முதுகலை ஆசிரியா்களுக்கு செயல்திறன்மிகு வகுப்பறை, கணினி தொழில்நுட்பவியல் சாா்ந்த பணிதிறன் மேம்பாடு குறித்த முதன்மை கருத்தாளா் பயிற்சி நடைபெற்றது. வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்... மேலும் பார்க்க

பைக்-லாரி மோதல்: பெண் உயிரிழப்பு

வேலூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். வேலூா் ஊசூா் கோவிந்தரெட்டி பாளையம் ராஜவீதியைச் சோ்ந்தவா் பெருமாள், அரசுப் பேருந்து ஓட்டுநா். இவரது மனைவி முனிலட்சுமி(44). இவா்களத... மேலும் பார்க்க

அதிமுக 53-ஆவது ஆண்டு தொடக்க விழா, கொடியேற்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக 53-ஆவது ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. குடியாத்தம் நகர அதிமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச்... மேலும் பார்க்க