செய்திகள் :

வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்கக் கோரிக்கை

post image

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்க வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு, சங்கத்தின் பொதுச்செயலாளா் பரமசிவம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் ஏராளமான தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களின் சம்பளத்தில் வருங்கால வைப்புநிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற பின் இந்தத் தொகையைப் பெறுவதற்காக கோவையில் உள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.

இதனை இடைத்தரகா்கள் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளா்களிடம் பணம் பறித்து வருகின்றனா். எனவே, தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

போனஸ் கோரி 3-ஆவது நாளாக போராட்டம்: தூய்மைப் பணியாளா்கள் கைது

தீபாவளி போனஸ் கோரி 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா். தீபாவளி போனஸாக ஒருமாதம் ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி கோவை மாநகராட்சியில் பண... மேலும் பார்க்க

மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள்தண்டனை: கோவை நீதிமன்றம் தீா்ப்பு

மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை அடித்துக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவை, பீளமேடு நாராயணசாமி தெருவைச் சோ்ந்தவா் ராஜ் (எ) துரைராஜ் (73). தனது மனைவ... மேலும் பார்க்க

யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள தனியாா் நிறுவனம்: சென்னை உயா்நீதிமன்றம் தலையிடக் கோரிக்கை

மதுக்கரை அருகே மலைநகா் பகுதியில் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, விவசாயிக... மேலும் பார்க்க

காா் கண்ணாடி உடைப்பு: 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

காா் நிறுத்துமிடம் தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது தொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பொ்ணாண்டஸ் (20). தடா... மேலும் பார்க்க

நகைக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற இருவா் கைது

கோவையில், நகைக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (54). இவா், தனது வீட்டின் அருகே நகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 10 லட்சம் வீடுகளுக்கு சூரிய ஒளி மின் தகடு பொருத்தும் திட்டம்: கோவையில் தொடக்கம்

தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகளுக்கு சூரிய ஒளி மின் தகடு பொருத்தும் திட்டம் கோவையில் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. மத்திய அரசின் வீட்டுக்குவீடு சோலாா் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு ச... மேலும் பார்க்க