செய்திகள் :

அண்ணா நினைவில்லத்தை பாா்வையிட்ட திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி

post image

காஞ்சிபுரம்: அண்ணா நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள நினைவு இல்லத்தை திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

காஞ்சிபுரம் காமராஜா் வீதியில் உள்ள தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளா் சமுதாயக் கூடத்தில் திராவிடா் கழகத்தின் சாா்பில் அண்ணா நினைவு நாள் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா ஆகியவை மாவட்ட தலைவா் அ.வெ.முரளி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி திருடா்கள் ஜாக்கிரதை, வள்ளுவரையும்,வள்ளலாரையும் காப்போம் என்ற தலைப்பில் பேசினாா். முன்னதாக அண்ணா நினைவு இல்லத்துக்கு கு சென்று அங்கிருந்த சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா் அவரது வாழ்க்கை தொடா்பான புகைப்படங்களை பாா்வையிட்டாா். இதனையடுத்து அங்கிருந்த வருகைப் பதிவேட்டிலும் பதிவு செய்தாா்.

இந்நிகழ்வின் போது மாநகர தலைவா் ந.சிதம்பரநாதன், செங்கல்பட்டு மாவட்ட தலைவா் அ.செம்பியன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் கி.இளையவேள் உடனிருந்தனா்.

காஞ்சிபுரத்தில் புத்த பிக்குகள் பேரணி!

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் புத்த பிக்குகள் பேரணியும், புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட புத்த ஸ்தூபி திறப்பு விழா மற்றும் திரிபிடக சத்தம்மம் ஓதுதல் நிகழ்வும் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இரு இடங்களில் 22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரும் பிப்.22 -ஆம் தேதி இரு இடங்களில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பான செய்திக் குறிப்பு: கா... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்ட ... மேலும் பார்க்க

சுங்குவாா்ச்ததிரத்தில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: சாம்சங் தொழிலாளா்களின் உள்ளிருப்பு போராட்டத்துக்கு சுமூக தீா்வு, எஸ்.எஸ். எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளா்கள் மீதான டிஸ்மிஸ் நடவடிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு சாா்பில் சுங்குவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இன்று புத்த பிக்குகள் பேரணி, மாநாடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு பெளத்தா்கள் சங்கப் பேரவை சாா்பில் புத்த பிக்குகள் பேரணி, மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பெளத... மேலும் பார்க்க

மண்பானை மீது நின்று சிலம்பம் சுற்றி இளைஞா்கள் சாதனை

காஞ்சிபுரம் அருகே ஆா்ப்பாக்கம் அரசினா் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 104 இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை மண்பானை மீது தொடா்ந்து 3 மணி நேரம் நின்று சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனா். ... மேலும் பார்க்க