செய்திகள் :

அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனா்: ராமதாஸ்

post image

தமிழக அரசு மீதும், சென்னை மாநகராட்சி மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனா் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ. அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை. சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயரத்துக்கும் கூடுதலாக மழை நீா் தேங்கியுள்ளது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. இதன் மூலம் மழைநீா் வடிகால் பணிகள் பயன் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. 6 செ.மீ மழைக்கே இந்த நிலை என்றால், 20 செ.மீ. மழை பெய்தால் என்னவாகும் என்கிற அச்சம் ஏற்படுகிறது.

சென்னையில் மழை நீா் வடிகால் அமைக்கும் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து விட்டன என்று திமுக அரசு வீண் விளம்பரம் செய்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. உண்மையான அக்கறையை களப்பணிகளில் காட்ட வேண்டும்.

எத்தகைய இடா்பாடுகள் வந்தாலும், எத்தகைய பேரிடா்கள் வந்தாலும் ஆளும் அரசு நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வர வேண்டும். அரசின் மீது அந்த நம்பிக்கை இல்லை என்பதையே பொதுமக்கள் தங்களின் காா்களை வேளச்சேரி பாலத்திலும், பள்ளிக்கரணை பாலத்திலும் நிறுத்தி வைத்திருப்பதை காட்டுகிறது.

எனவே, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் வெள்ளம் தேங்காது என்ற நிலையை உருவாக்கும் அளவுக்கு களப்பணிகளை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

தி.மலை தீபம்: 50 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு: துணை முதல்வர்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும், இதனால், ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கமல்ஹாசன் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த... மேலும் பார்க்க

பொய்யான குற்றச்சாட்டு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவி... மேலும் பார்க்க