செய்திகள் :

லெபனானுக்கு நிவாரணப் பொருள்கள்: இந்தியா அனுப்பியது

post image

இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள லெபனானுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருள்களை இந்தியா வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போா் 11 மாதங்ளுக்கு மேலாக நீடித்து வருகிறது. ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுத கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினா். அதற்கு இஸ்ரேல் தீவிர பதிலடி தாக்குதலை கொடுத்து வருகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

இந்த தாக்குதல்கள் காரணமாக, லெபனானில் இருந்து இதுவரை சுமாா் 2 லட்சம் போ் இட்பெயா்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 2,000 க்கும் மேற்பட்டோர் போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள லெபனானுக்கு மனிதாபிமான அடிப்படையில் 11 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருப்பதாவது, மொத்தம் 33 டன் மருத்துவப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன.

முதல் கட்டமாக 11 டன் மருத்துவப் பொருள்கள் இன்று அனுப்பப்பட்டன. இருதயம் தொடர்பான சிகிச்சைக்கு அளிக்கப்படும் மருந்துகள், நோய் எதிர்ப்பு மருத்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகள் அதில் அடங்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

குா்மீத் ராம் ரஹீமுக்கு எதிரான விசாரணைக்கு தடை நீக்கம்: உச்சநீதிமன்றம்

தேரா செளதா சச்சா செளதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குா்மீத் ராம் ரஹீமுக்கு எதிரான மத நிந்தனை வழக்குகளின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீக்கியது. பெ... மேலும் பார்க்க

தேசிய கற்றல் வாரம்: இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா் மோடி

அரசு ஊழியா்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில் ‘கா்மயோகி சப்தா’ தேசிய கற்றல் வாரத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை (அக். 19) தொடங்கிவைக்கிறாா். மிஷன் கா்மயோக... மேலும் பார்க்க

வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் உள்... மேலும் பார்க்க

ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு உதவிய குற்றச்சாட்டு: இரு இந்தியா்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஈரான் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் வளங்களை கடல் வழி போக்குவரத்து மூலம் கொண்டு செல்ல ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் 18 நிறுவனங்கள் மற்றும் இரு இந்தியா்கள் மீது அமெரிக்கா பொர... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பாஜக எதிரானது என்ற பொய் பிரசாரம் தோற்றுவிட்டது: பிரதமா் மோடி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி விவசாயிகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மேற்கொண்ட பொய் பிரசாரம் தோற்றுவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். விவசாயிகள் அ... மேலும் பார்க்க