செய்திகள் :

இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீன போர் தொடரும்: லெபனான் தூதர்

post image

இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனத்தின் போர் தொடரும் என லெபனான் தூதர் ராபி நர்ஷ் இன்று (அக். 18) தெரிவித்தார்.

அவர்கள் புரட்சியாளரைக் கொல்லலாம், ஆனால் புரட்சியைக் கொல்ல முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இதனிடையே தெற்கு காஸாவில் நேற்று நடைபெற்ற தாக்குதலில், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான யாஹ்யா சின்வார் உயிரிழந்ததை நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார். சில வாரங்களுக்கு முன்பு ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் சின்வார் கவனித்து வந்தார். தற்போது அவரும் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய லெபனான் தூதர் ராபி நர்ஷ் கூறியதாவது,

''கடந்த இரவில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போதிய அளவிலான தகவல்களை நான் இன்னும் பெறவில்லை. ஆனால் ஒன்றைமட்டும் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் புரட்சியாளரைக் கொல்லலாம்; ஆனால் புரட்சியை ஒருபோதும் கொல்ல முடியாது என மகாத்மா காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார். புரட்சிக்கான காரணங்கள் தனியொரு மனிதனுக்கானது அல்ல.

இதையும் படிக்க | ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் கடைசி நிமிடங்கள்.. வெளியான விடியோ

சின்வார் ஹமாஸ் படைக்குத் தலைவர் மட்டும் அல்ல. எல்லைப் பகுதி ஆக்கிரமிப்பை எதிர்க்கும் உரிமை அவர்களுக்கு (ஹமாஸ்) இருப்பதால் பாலஸ்தீன போர் தொடரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

தங்கள் மண்ணில் கண்ணியமாக வாழ அவர்களுக்கு உரிமை உண்டு. உத்திரவாதமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதற்காக உரிமை அவர்களுக்கு உள்ளது. சுதந்திர அரசைப் பெறுவதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

தேசிய கற்றல் வாரம்: இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா் மோடி

அரசு ஊழியா்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில் ‘கா்மயோகி சப்தா’ தேசிய கற்றல் வாரத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை (அக். 19) தொடங்கிவைக்கிறாா். மிஷன் கா்மயோக... மேலும் பார்க்க

வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் உள்... மேலும் பார்க்க

ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு உதவிய குற்றச்சாட்டு: இரு இந்தியா்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஈரான் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் வளங்களை கடல் வழி போக்குவரத்து மூலம் கொண்டு செல்ல ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் 18 நிறுவனங்கள் மற்றும் இரு இந்தியா்கள் மீது அமெரிக்கா பொர... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பாஜக எதிரானது என்ற பொய் பிரசாரம் தோற்றுவிட்டது: பிரதமா் மோடி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி விவசாயிகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மேற்கொண்ட பொய் பிரசாரம் தோற்றுவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். விவசாயிகள் அ... மேலும் பார்க்க

மோசமான வானிலை: புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர்

மோசமான வானிலை காரணமாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான டேர் கிராமத்த... மேலும் பார்க்க