செய்திகள் :

அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி

post image

அவிநாசி: அவிநாசி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கோவை மருதமலை சாலை ஐஓபி காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள்கள் அபர்ணா (26). சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஐஐஎம்-இல் 2-ம் ஆண்டு எம்.பி.ஏ., படித்து வருகிறார். அவரது இளைய மகள் ஹேமா (21). கோவை தனியார் கல்லூரியில் பி.இ., படித்து வருகிறார். மேலும் கோவை ஆர்.எஸ்.புரம் ஐஸ்வர்யா காம்பவுண்டை சேர்ந்த மோனிஷ் பாபு (28). இவர்கள் 3 பேரும் காரில் கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் இருந்து கோவை நோக்கி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்து கொண்டிருந்தனர்.

இதையும் படிக்க |இந்திய பணியாளா்களுக்கு விசா 4 மடங்கு அதிகரிப்பு: ஜொ்மனி முடிவு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அபர்ணா, ஹேமா, காரை ஒட்டி வந்த மோனிஷ் பாபு ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவலறிந்து அவிநாசி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்தில் பலியானவர்களின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து லாரி ஓட்டுநர் கோவை கரும்புக்கடையை ரகுமான்கான் (24) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜா யானை!

கோவை: கோவை செம்மேடு, ஆலங்குட்டை பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டுயானை சிறுவாணி காட்டு ராஜா சனிக்கிழமை நடைப் பயிற்சிக்கு செல்வது போன்று ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜாவை வனப்பகுதி... மேலும் பார்க்க

கார் டயர் வெடித்து விபத்து: 9 மாத குழந்தை பலி

சேலம்: சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தம்பட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானத்தில் 9 மாத குழந்தை பலியானது. படுகாயமடைந்த பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சேலம்-சென... மேலும் பார்க்க

மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்: விஜய் ட்வீட்

நாளை நமது மாநாட்டில் சந்திப்போம்.மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம் என சனிக்கிழமை தொண்டா்களுக்கு, அந்த கட்சியின் தலைவா் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தவெக தொண்டா்களுக்க... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு நெல்லை, குமரியில் மழை பெய்யும்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தென்க... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்மட்டம் 104.76 அடியாக உயர்வு!

மேட்டூர் அணைக்கு நீர்மட்டம் சனிக்கிழமை காலை 104.76 அடியாக உயர்ந்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை காலை (அக்.26) முதல் வினாடிக்கு 7,500 கன... மேலும் பார்க்க

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதை அ... மேலும் பார்க்க