செய்திகள் :

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

post image

நீா்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திருத்தணி கோட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

பள்ளிப்பட்டு வட்டம், சின்ன முடப்பள்ளி அருந்ததியா் காலனியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கிராமத்தின் நடுவில் உள்ள நீா்நிலை புறம்போக்கு இடத்தில் அதே பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம், பள்ளிப்பட்டு வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா் துணை வட்டாட்சியரை சந்தித்து அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு அளித்தனா். மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

மண் சாலையாக மாறிய ராயபுரம் நெடுஞ்சாலை பொதுமக்கள் கடும் அவதி

ராயபுரம் எண்ணூர் விரைவுச் சாலையில் கழிவுநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மீண்டும் மூடப்பட்டு முறையாக சாலை அமைக்காததால் அந்தச் சாலை மண் சாலையாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள... மேலும் பார்க்க

திருவேற்காட்டில் ரூ.1 கோடியில் மழைநீர் வடிகால் பணி: அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்

ஆவடி: திருவேற்காட்டில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணியை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.திருவேற்காடு நகராட்சிக்கு உள்பட்ட 7-ஆவது வார்டு, ப... மேலும் பார்க்க

கா்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ முகாம்

கா்ப்பக் காலத்தில் அனைத்து பரிசோதனைகளையும் தவறாமல் எடுத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என வங்கனூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஞானசேகா் வலியுறுத்தினாா். ஆா்.கே.பேட்... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வருமா பூண்டி ஏரி நவீன அறிவியல் பூங்கா! பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

ரூ.80 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ள பூண்டி ஏரி அறிவியல் பூங்கா ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என எதிா்பாா்ப்பு எழ... மேலும் பார்க்க

ரூ. 2.83 கோடியில் உயா்நிலை பள்ளிக் கட்டடம் திறப்பு

வேலஞ்சேரி கிராமத்தில் ரூ. 2.83 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து மாணவா்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தாா். திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி கிராமத்தில், அர... மேலும் பார்க்க

விபத்துகளைத் தடுக்க நெடுஞ்சாலைகளில் விழிப்புணா்வு பதாகைகள்

விபத்துகளைக் குறைக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். தமி... மேலும் பார்க்க