செய்திகள் :

இந்திய அணி எங்கு தவறு செய்கிறது? பந்துவீச்சு பயிற்சியாளர் பதில்!

post image

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் பேசியுள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: சதம் விளாசிய சௌத் ஷகீல்; 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து தடுமாற்றம்!

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

எங்கு தவறு செய்கிறது இந்திய அணி?

முதல் இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கத் தவறுவது அணிக்கு அழுத்தமான சூழலை உருவாக்குவதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த மோர்னே மோர்க்கல் பேசியதாவது: அணி சிறப்பாக செயல்பட தவறுவதற்கு பேட்ஸ்மேன்கள் காரணமா அல்லது பந்துவீச்சாளர்கள் காரணமா என்ற கேள்விக்குள் நான் ஒருபோதும் செல்ல விரும்புவதில்லை. ஆனால், டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிப்பது முக்கியம். கடந்த இரண்டு போட்டிகளாக இந்திய அணி அதனை செய்யத் தவறிவிட்டது.

இதையும் படிக்க: வார்னர் திரும்ப விளையாடுவாரா? கம்மின்ஸ் கூறியதென்ன?

எங்களிடம் உலகத் தரத்திலான பேட்டிங் வரிசை இருக்கிறது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் சிறப்பாக பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர்கள். இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு அதிக அளவிலான ரன்கள் குவிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய அணி இந்த கடினமான சூழ்நிலையிலிருந்து எப்படி மீண்டு வரப் போகிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது என்றார்.

நியூசிலாந்துக்கு பாராட்டு

நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டதாக மோர்னே மோர்க்கல் அந்த அணியை பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்து அணி மிகச் சிறப்பாக பந்துவீசியதாக நினைக்கிறேன். இந்திய அணி வீரர்கள் ஒரு ரன் எடுத்து ஸ்டிரைக்கை தொடர்ச்சியாக மாற்ற மிகவும் சிரமப்பட்டனர். அந்த அளவுக்கு நியூசிலாந்து அணி சிறப்பாக பந்துவீசியது. மிட்செல் சாண்ட்னர் சிறப்பாக பந்துவீசினார்.

இதையும் படிக்க: ஓராண்டில் விரைவாக 1,000 ரன்கள்..! ஜெய்ஸ்வால் புதிய சாதனை!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நியூசிலாந்து அணி மிகவும் தயாராக வந்துள்ளது. இந்திய ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப நியூசிலாந்து அணி தங்களை உடனடியாக சிறப்பாக மாற்றிக் கொண்டுள்ளனர். இதுவரை நியூசிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றார்.

சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்

ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைக்கவுள்ள வீரர்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு ... மேலும் பார்க்க

சதம் விளாசிய சௌத் ஷகீல்; 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து தடுமாற்றம்!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது.பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (அக்டோபர் 24) ராவல்ப... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட்: 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் நே... மேலும் பார்க்க

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலிருந்து டெம்பா பவுமா விலகல்!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் டெம்பா பவுமா விலகியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ... மேலும் பார்க்க

வார்னர் திரும்ப விளையாடுவாரா? கம்மின்ஸ் கூறியதென்ன?

37 வயதான வாா்னா் டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தாா். கடந்த 2009-இல் அறிமுகமான வாா்னா், டி20யில் 110 ஆட்டங்களில் 3,277 ரன்களையும், 112 டெஸ்ட் ஆட்டங்களில் 8,786 ரன்களையும், 161... மேலும் பார்க்க

நியூஸி. சுழலில் சுருண்டது இந்தியா! சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் தடுமாறிவருகிறது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் நேற்று (அக்டோபர் 24) தொடங... மேலும் பார்க்க