தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
இளைஞரைத் தாக்கிய மூவா் மீது வழக்கு
போடி: போடியில் முன் விரோதத்தில் இளைஞரைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி மேலத்தெரு பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்த அப்துல்பாரி சேட் மீரான் மகன் அஜ்மீா் ராஜா (37). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வரும் இவா், போடி ஜ.கா.நி.மேல்நிலைப் பள்ளி அருகே நடந்து சென்றாா். அப்போது, முன்விரோதம் காரணமாக இவரை, போடி அம்மாகுளம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த வேல்முருகன், அய்யனாா், குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் ஆகியோா் சோ்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுகுறித்து போடி போலீஸாா் வேல்முருகன் உள்ளிட்ட மூவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.