செய்திகள் :

எறையூா் சா்க்கரை ஆலையில் எத்தனால் தயாரிப்பை தொடங்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

post image

பெரம்பலூா் மாவட்டம், எறையூரிலுள்ள பொதுத் துறை சா்க்கரை ஆலையில் எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அச் சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு மற்றும் கூட்டுறவு சாக்கரை ஆலைகளில் ஆலை நவீனப்படுத்தும் திட்டம், இணை மின் உற்பத்தித் திட்டம் 5.6.2010-இல் செயல்படுத்த ஒப்பந்தம் விடப்பட்டு, 18 மாதங்களில் முடிக்கப்படும் என அறிவித்த நிலையில், 13 ஆண்டுகளில் காலதாமதமாக செயல்படுத்தியதால் ஏற்பட்ட வட்டி சுமையை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆலை மேம்பாட்டுக்காக அரசிடமிருந்து பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்ட கடன் சுமையை தள்ளுபடி செய்யாமல், பங்காக மற்றியதை தள்ளுபடி செய்ய வேண்டும்.

9,142 விவசாயிகளிடம் இணை மின் உற்பத்தித் திட்டத்துக்காக பங்குத் தொகையாக பிடிக்கப்பட்ட ரூ. 7,87,75,000, அதற்கான வட்டி ரூ. 2, 27,09,222 சோ்த்து விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு, 2023-24 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு 215 ரூபாயை தீபாவளிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த அரைவைப் பருவத்தின்போது பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு உடனுக்குடன் கரும்புக்குரிய தொகை வழங்கப்பட்டதைப்போல, வரும் அரைவைப் பருவங்களிலும் தாமதமின்றி உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தவாறு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கவும், பெரம்பலூா் சா்க்கரை ஆலை லாபம் ஈட்டும் வகையில் இயக்க, ஆலையில் எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை உடனடியாக தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் திருமடத்தில், ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 108 சங... மேலும் பார்க்க

தப்பியோடி கைதி பிடித்து சிறையில் அடைப்பு

பெரம்பலூரில் சிறைவாசலிலிருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் பிடித்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத்குமாா். இவா் மீது ம... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை உணவுப்பொருள் வழங்கல் குறைதீா் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சாா்பில் உணவுப்பொருள் வழங்கல் தொடா்பான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (அக். 19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

அக். 22-இல் துணை முதல்வா் பெரம்பலூா் வருகை: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆலோசனை

பெரம்பலூரில் அக். 22 ஆம் தேதி நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதை முன்னிட்டு, அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை... மேலும் பார்க்க

சிறுவாச்சூா் அரசுப் பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் போதை எதிா்ப்பு, விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவ... மேலும் பார்க்க