செய்திகள் :

ஐபிஎல் 2025: கேள்விக்குறியாக இருக்கும் ராஜஸ்தான் அணியின் சமநிலை!

post image

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா ராஜஸ்தான் அணியின் சமநிலை குறித்து பேசியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருப்பவர்கள்:

சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், சந்தீப் சர்மா, ஷிம்ரோன் ஹெட்மையர், ஜோஃப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ் பாண்டே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, நிதீஷ் ராணா, ஃபஸல்ஹக் ஃபரூக்கி, குவெனா மாப்பாக்கா, அகேஷ் மதுவாள். 

கடந்தாண்டு முக்கிய வீரர்களாக இருந்த பட்லர், போல்ட், சஹால், அஸ்வின் அந்த அணியை விட்டு வேறு அணிக்கு மாறினார்கள்.

இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அணி சமநிலை கேள்விக்குறியாக இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் பேசியதாவது:

ஆல்ரவுண்டர்கள் இல்லை

ராஜஸ்தான் அணி அவர்களது 4 பெரிய வீரர்களை இழந்துள்ளார்கள். அந்த நால்வர்களுக்குப் பதிலாக எடுத்த வீரர்கள் அவர்களுக்கு அருகில்கூட செல்லமாட்டார்கள்.

ஹெட்மயரைத் தவிர மொத்தமாக இந்திய அணியை மட்டுமே நம்பியுள்ள பேட்டிங் ஆர்டராக இருக்கிறது. வெளிநாட்டு பேட்டர் யாரையும் எடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது.

அனைத்து அணிகளும் சிறந்த ஆல்-ரவுண்டர்களை வைத்துள்ளன. ராஜஸ்தான் அணிக்கு அது கடந்தாண்டும் இல்லை, தற்போதும் அதேமாதிரிதான் இருக்கிறது.

ஹசரங்கா, ஆர்ச்சரின் மீது கூடுதல் பொறுப்பு

ஹசரங்கா உண்மையில் ஐபிஎல் தொடரில் ஆல்-ரவுண்டராக இருக்கவில்லை. பந்துவீச்சில் அசத்தினாலும் அவரால் பேட்டிங்கில் பெரிதாக சாதிக்க முடியவில்லை.

ஆர்ச்சரின் சமீபத்திய ஃபார்ம், அவரது காயமும் அவரை எடுத்தது கடினமான முடிவாகிவிட்டது. அவர் சரியாக விளையாடவில்லை என்றால் ராஜஸ்தான் அணி மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும் என்றார்.

ராஜஸ்தான் அணியின் முதல் போட்டி மார்ச்.23ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவிருக்கிறது.

முன்னெச்சரிக்கையாக இருக்க விரும்புகிறேன்: ரிஷப் பந்த்

தலைமைப் பண்பு குறித்து லக்னௌ அணியின் புதிய கேப்டன் ரிஷப் பந்த் முன்னெச்சரிக்கையாக இருக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச்.22ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. தில்ல... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் வருகை..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஹைதராபாத் வந்தடைந்தார். இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச்.22ஆம் தேதி தொடங்கவிருக்கின்றன. வெளிநாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் அதன் அணிகளுக்கு... மேலும் பார்க்க

காயம் குணமாகியது: சன்ரைசர்ஸ் அணியில் இணையும் நிதீஷ் ரெட்டி!

பிரபல ஆல்ரவுண்டர் நிதீஷ் ரெட்டி சன்ரைசர்ஸ் அணியில் இணைய தயாராக இருக்கிறார்.கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட்டிங், பந்துவீச்சு என அசத்தியவர் நிதீஷ் குமார் ரெட்டி. இவரது சிறப்பான செ... மேலும் பார்க்க