செய்திகள் :

ஒன் பை டூ: “மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஆறுதல் சொல்லக்கூட அ.தி.மு.க-வினர் செல்லவில்லை...”

post image
சி.டி.ஆர்.நிர்மல்குமார்

சி.டி.ஆர்.நிர்மல்குமார், தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க

“உளறுகிறார் அமைச்சர். மழையால் எந்த பாதிப்பும் இல்லை என்றார்கள். இப்போது, `பாதிக்கப்பட்ட மக்கள்’ என்று அமைச்சரே சொல்கிறார். இதிலிருந்தே தி.மு.க பொய் பேசுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கோவை, மதுரையில் ஒரு நாள் மழைக்கே மொத்த ஊரும் வெள்ளக் காடானது. அங்கு அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் வருவதற்கு முன்பாகவே களத்தில் மக்களுக்கு உதவியாக நின்றது அ.தி.மு.க-வினர்தான். எங்கள் தலைவர் எடப்பாடியார் நிவாரணம் கொடுத்ததையும், மீட்புப்பணிகளை ஆய்வு செய்ததையும் அமைச்சர் சேகர் பாபு செய்தித்தாள்களில் படிக்கவில்லையா அல்லது தெரியாததுபோல் நடிக்கிறாரா என்று தெரியவில்லை. சென்னையைப் பொறுத்தவரை பெய்வதாகச் சொல்லப்பட்ட மழை, பெய்யவில்லை. அப்படியிருந்தும், ஒரு நாள் மழைக்கே முதல்வரின் கொளத்தூர் தொகுதி தொடங்கி பல பகுதிகளும் தண்ணீரில் மூழ்கிப்போயின. கடந்த ஆண்டு சென்னை வெள்ளத்தில் தி.மு.க அமைச்சர்கள் தொடங்கி கவுன்சிலர்கள் வரை யாரும் இல்லாத நேரத்தில், மக்களுடன் இருந்தது அ.தி.மு.க-வினர் மட்டுமே. எனவே, விளம்பரம் செய்து ஆட்சி நடத்தும் தி.மு.க எங்களைக் குறை சொல்வது அபத்தமானது!”

கலை கதிரவன்

கலை கதிரவன், மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர், தி.மு.க

“அமைச்சர் உண்மையை உடைத்துப் பேசியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிக்கு, சொந்தக் கட்சிப் பிரச்னையைச் சரிசெய்யவே நேரம் சரியாக இருக்கிறது. இதில் மக்களை எங்கே வந்து பார்ப்பது... அவர்கள் ஆட்சியின்போது, 2015-ல் சென்னையே வெள்ளத்தில் மூழ்கிப்போனது. அப்போது சென்னையிலிருந்த அம்மையார் ஜெயலலிதா, இரண்டு நாள்களுக்குப் பின்னர்தானே வந்து பார்த்தார்... கஜா புயல் சமயத்தில் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளை ஐந்து நாள்களுக்குப் பிறகுதானே எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்... இப்போது எப்படி அவர்கள் மக்களைச் சந்திப்பார்கள்... ஆனால் திராவிட மாடல் ஆட்சியில், மழை வருவதற்கு முன்பாகவே முதல்வர் தொடங்கி அதிகாரிகள் வரை அனைவருமே முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை உறுதிசெய்தனர். நமது முதல்வர், கொட்டும் மழையிலும் களத்தில் இருந்தார். அதேபோல, நமது துணை முதல்வரோ மழை தொடங்குவதற்கு முன்பிருந்தே... கிட்டத்தட்ட 72 மணி நேரம் இரவு, பகல் பாராமல் சென்னை முழுவதும் தொடர் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். இந்த நிலையில், தி.மு.க-வைக் குறை சொல்ல அ.தி.மு.க-வுக்குக் கடுகளவுகூட அருகதை இல்லை!”

`காமராஜர் குறித்து சர்ச்சை கருத்து’ தெரிவித்த திமுக ராஜீவ் காந்தி - கொதித்த காங்கிரஸ்; திமுக மெளனம்!

சமீபத்தில் தி.மு.க இளைஞரணி அலுவலகத்தில் நுால் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய அந்த கட்சியின் மாணவரணி மாநில தலைவர் ராஜீவ் காந்தி, "ராஜாஜி மூடிய பள்ளிகளைதான் காமராஜர் திறந்தார். கல்வி க... மேலும் பார்க்க

Vijay: TVK மாநாட்டில் ஜார்ஜ் கோட்டை தீம்; ஏற்பாடுகள் என்னென்ன? | Spot Visit

தமிழக அரசியலில் முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கிற விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி வி.சாலை பகுதிக்குச்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: பாஜக 156, சிவசேனா 78, அஜித்பவாருக்கு 54 - கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு அப்டேட்

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிட ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியும் தொகுதிப் பங்கீடு குறித்து பே... மேலும் பார்க்க

TVK: தவெக நிர்வாகி மறைவு: "ஏன்டா இப்படிப் பண்ண.." - கதறி அழுத்த ஆனந்த்; இரங்கல் தெரிவித்த விஐய்

அக்டோபர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அக்கட்சியின் நிர்வாகிகள் விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டிற்கான வேலைகளைச் செய்து வருகின்றனர்.அந்த வ... மேலும் பார்க்க

`ராஜ கண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு’ - அறப்போர் இயக்கம்

'அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்கள் மூலம் கிட்டதட்ட ரூ.400 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக' அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

காமராஜர் குறித்து `சர்ச்சை கருத்து' தெரிவித்த திமுக ராஜீவ் காந்தி; கொதித்த காங்கிரஸ், தமிழிசை

'காமராஜர் சொந்த காசிலா பள்ளிக்கூடங்களை திறந்தார்' என்று திமுக மாணவர் அணி நிர்வாகி ராஜீவ் காந்தி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.'காமராஜர் சொந்த காசிலா பள்ளிக்கூடங்களை திறந்தார். பெரியார் அறிவுறுத... மேலும் பார்க்க