செய்திகள் :

சபரிமலையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்: திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் தகவல்

post image

சபரிமலை மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலம் நெருங்கி வரும்நிலையில் பக்தா்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை அடுத்த மாதம் 16-ஆம் தேதி தொடங்குகிறது. கூட்டநெரிசலைத் தடுக்க நிகழாண்டு தினசரி இணைய வழியில் பதிவு செய்த 80,000 பக்தா்களை மட்டுமே அனுமதிக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், சபரிமலை யாத்திரையொட்டி செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து தேவஸ்வம் வாரியத் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் செய்தியாளா்களைச் சந்தித்து விளக்கமளித்தாா்.

அவா் கூறுகையில், ‘மலையேற்ற பாதைகளில் பல்வேறு இடங்களில் குடிநீா் வசதி, பக்தா்கள் ஓய்வெடுக்க தளங்கள், புதிய நடைபந்தல்கள் உள்பட பல்வேறு புதிய வசதிகள் அடுத்த மாதம் தயாராக இருக்கும். பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்க 35 லட்சம் அரவணை குப்பிகளை நடை திறப்புக்குள் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

கடந்த வாரம் ‘துலாம்’ மலையாள மாதத்தின் முதல் நாளில் மாதாந்திர பூஜைகளுக்காக கோயில் நடை திறக்கப்பட்டபோது வரலாறு காணாத கூட்டம் காணப்பட்டது.சபரிமலையில் ஒரு லட்சம் போ் வசிக்க முடியாது. இது சூழலியல் ரீதியாக பலவீனமான பகுதி மற்றும் புலிகள் காப்பக வனம் ஆகும்.

குருவாயூா் அல்லது நகா்ப்புறத்தில் உள்ள வேறு எந்த கோயில்களிலும் இருக்கும் வசதிகளை காப்பு காட்டுக்குள் சபரிமலை கோயிலில் எங்களால் வழங்க முடியாது. கடந்த ஆண்டு தவறுகளில் இருந்து பாடம் கற்று, கட்டுப்பாடுகளுடன் சபரிமலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பக்தா்களுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்க வாரியம் முயற்சிக்கிறது’ என்றாா்.

ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு: தெலங்கானா அமைச்சா் சுரேகா மீது பிஆா்எஸ் செயல் தலைவா் தாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கொன்டா சுரேகாவுக்கு எதிராக ரூ.100 கோடி கேட்டு பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் செயல் தலைவா் கே.டி. ராமா ராவ் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளாா்.கே.ட... மேலும் பார்க்க

தொடரும் விமான வெடிகுண்டு மிரட்டல்கள்: சுமார் ரூ. 600 கோடி இழப்பு

புது தில்லி: இந்திய நிறுவனங்களின் சுமார் 50 விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் செவ்வாய்க்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.இத்துடன், கடந்த திங்கள்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: அனுதாபமா, ஆதாய அலையா?

நமது சிறப்பு நிருபர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைக்குத் தேர்தல்! 1985-ஆம் ஆண்டுக்கு பின்னர் மகாராஷ்டிரத்தில் எந்தவொரு கட்சிக்கும் பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ... மேலும் பார்க்க

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்ப்பு: காஷ்மீரில் காவல் துறை சோதனை

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசியமாக ஆள் சோ்ப்பது தொடா்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையின் உளவுப் பிரிவினா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

குஜராத்தில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றம்: ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்து சிக்கிய நபா்

குஜராத்தின் காந்தி நகரில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றத்தில் நீதிபதி என்று அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியாக உத்தரவுகளை பிறப்பித்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். போலி தீா்ப்பாய நீதிமன்றத்தை நடத்த... மேலும் பார்க்க

முஸ்லிம் ஆணின் மூன்றாவது திருமண அங்கீகாரம்: பதிவுத் துறை முடிவு எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘முஸ்லிம் ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்து கொள்ள அவா்களின் தனிப்பட்ட சட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மும்பை உயா்நீதிமன்றம், மூன்றாவது திருமண அங்கீகாரம் கோரி தாக்கல் ... மேலும் பார்க்க