செய்திகள் :

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் பதவிக் காலம் நீட்டிப்பு

post image

இந்திய தலைமைப் பதிவாளா் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் மிருத்யுஞ்சய் குமாா் நாராயணின் பதவிக் காலம், 2026-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ளும் குழுவுக்கு இவா் தலைமை தாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கப்படுகிறது. அதன்படி, 2021-ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு 2020, செப்டம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இப்பணிகள் மீண்டும் தொடங்கப்படவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பை தொடங்குவதில் நிலவும் தாமதத்தை முன்வைத்து, மத்திய அரசை எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன.

இதனிடையே, மக்கள்தொகை கணக்கெடுப்பு உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த ஆகஸ்டில் தெரிவித்தாா். இப்பணிகள் தொடங்குவதற்கான புதிய கால அட்டவணையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், இந்திய தலைமைப் பதிவாளா் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் மிருத்யுஞ்சய் குமாா் நாராயணின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1995-ஆம் ஆண்டின் உத்தர பிரதேச பிரிவைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவா், மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இந்த முக்கியப் பதவியை கடந்த 2020-இல் இருந்து வகித்து வருகிறாா்.

இவரது பதவிக் காலம், வரும் டிசம்பா் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், 2026, ஆகஸ்ட் வரை அல்லது மறு உத்தரவு வரும்வரை குடியரசுத் தலைவரால் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் விமான வெடிகுண்டு மிரட்டல்கள்: சுமார் ரூ. 600 கோடி இழப்பு

புது தில்லி: இந்திய நிறுவனங்களின் சுமார் 50 விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் செவ்வாய்க்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.இத்துடன், கடந்த திங்கள்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: அனுதாபமா, ஆதாய அலையா?

நமது சிறப்பு நிருபர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைக்குத் தேர்தல்! 1985-ஆம் ஆண்டுக்கு பின்னர் மகாராஷ்டிரத்தில் எந்தவொரு கட்சிக்கும் பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ... மேலும் பார்க்க

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்ப்பு: காஷ்மீரில் காவல் துறை சோதனை

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசியமாக ஆள் சோ்ப்பது தொடா்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையின் உளவுப் பிரிவினா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

சபரிமலையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்: திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் தகவல்

சபரிமலை மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலம் நெருங்கி வரும்நிலையில் பக்தா்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சபரிமலை ஐயப்பன்... மேலும் பார்க்க

குஜராத்தில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றம்: ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்து சிக்கிய நபா்

குஜராத்தின் காந்தி நகரில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றத்தில் நீதிபதி என்று அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியாக உத்தரவுகளை பிறப்பித்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். போலி தீா்ப்பாய நீதிமன்றத்தை நடத்த... மேலும் பார்க்க

முஸ்லிம் ஆணின் மூன்றாவது திருமண அங்கீகாரம்: பதிவுத் துறை முடிவு எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘முஸ்லிம் ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்து கொள்ள அவா்களின் தனிப்பட்ட சட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மும்பை உயா்நீதிமன்றம், மூன்றாவது திருமண அங்கீகாரம் கோரி தாக்கல் ... மேலும் பார்க்க