``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
கடையநல்லூரை தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்த வலியுறுத்தி அமைச்சரிடம் மனு
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சியை தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் நகா்மன்ற தலைவா் நேரில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் ஆணையின்படி, கடையநல்லூா், கிருஷ்ணாபுரம், வைரவன் குளம் வருவாய் கிராமங்களையும் கம்பநேரி- புதுக்குடி வருவாய் கிராமத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய பகுதியாக கடையநல்லூா் நகராட்சி உள்ளது. முதல்நிலை நகராட்சியான கடையநல்லூரில் 1,02,410 போ் வசித்து வருகின்றனா். 33 வாா்டுகளை கொண்ட இங்கு 32,390 குடியிருப்புகள் உள்ளன. ஆண்டு வருமானம் சுமாா் ரூ.45 கோடியாகவும், செலவினம் ரூ. 37 கோடியாகவும் உள்ளது. ஆண்டு வருமானம் அதிகமாக இருப்பதால் தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்த மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
கடையநல்லூரில் மக்கள்தொகை பெருகிவரும் சூழலில், வளா்ச்சியை கருத்தில் கொண்டும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வசதியாகவும் தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்த வலியுறுத்தி ஏற்கெனவே நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே, கடையநல்லூா் நகராட்சியை தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன் உடன் இருந்தாா்.