செய்திகள் :

``கல்யாணம் தொடர்பான செய்தி, ரெண்டு பேர் குடும்பத்தையுமே பாதிக்குது” - 'பாக்கியலட்சுமி' திவ்யா கணேஷ்

post image

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ச்சியாக நல்ல டி.ஆர்.பியும் கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் செழியன் கேரக்டரில் விகாஷ் சம்பத்தும் அவருடைய மனைவியாக ஜெனிஃபர் கேரக்டரில் நடிகை திவ்யா கணேஷும் நடித்து வருகின்றனர்.

டிவியில் ஜோடியாக நடிக்கும் நடிகர் நடிகைகள் சில நேரங்களில் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்வது பொதுவாக நடப்பதுதான். தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் காதலர்களாக நடித்ததன் மூலம் காதலித்து கணவன் மனைவியான வர்களின்  பட்டியல் பெரியது. மிர்ச்சி செந்தில் - ஶ்ரீஜா, ஶ்ரீகுமார் - ஷமிதா, போஸ் வெங்கட் - சோனியா, சேத்தன் - தேவதர்ஷினி, ஆல்யா - சஞ்சீவ் என சொல்லிக் கொண்டே போகலாம்.

பாக்கியலட்சுமி ஜெனி / திவ்யா கணேஷ்

இது ஒருபக்கம் என்றால், ஜோடியாக நடித்தாலே சம்பந்தப்பட்டவர்கள் நிஜ ஜோடி தான் என நினைத்து சம்பந்தப்பட்டவர்கள் குறித்த தகவலும் தாறுமாறாகப் பரவுகின்றன.

அந்த வகையில் கடந்த சில தினங்களாக 'பாக்கியலட்சுமி' ஜெனி மற்றும் செழியன் இருவரும் நிஜமாகவே காதலிக்கிறார்கள் என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவ, உச்சபட்ச டென்ஷனில் இருக்கிறார் 'ஜெனி' திவ்யா.

அவரிடமே பேசினோம்.'' சீரியல்ல புருஷன் பொண்டாட்டியா நடிச்சா சீரியல் ரசிகர்கள் அவங்களை நிஜ தம்பதியாக நினைச்சுகிறாங்க. அது ஒரு வகையான வெகுளித்தனம். அதனால அதை பெரிசா எடுத்துக்க வேண்டியதில்லை. ஆனா சமூக ஊடகங்களில் ஒரு விஷயத்தை நாலு பேருக்கு சொல்றப்ப, அது உண்மையா இல்லையானு பல தடவை யோசிச்சு பதிவிடணும். ஏன்னா, இன்னைக்கு சோஷியல் மீடியா கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்திடுச்சு. உண்மையை விட பொய் ரொம்ப வேகமா பரவுது.

நானும் விகாஷும்  காதலிக்கிறோம்; கல்யாணம் செய்துக்க போறோம்னு ரெண்டு நாள் முன்னாடி ஒரு நியூஸ். எனக்கே அனுப்பி வச்சாங்க சிலர். சப்ஸ்கிரைபரே இல்லாத ஏதோவொரு யூ டியூப் சேனலில் வந்த அந்த நியூஸ் பார்த்துட்டு எனக்கு சிரிப்புதான் வந்தது. 'இதை யார் பாக்கப் போறாங்க'னு பெருசா எடுத்துக்காம விட்டுட்டேன்.

திவ்யா கணேஷ்

ஆனா அந்த ஏதோவொரு யூடியூப் சேனல் நியூஸையும் எடுத்துச் செய்தியா நாலு பேர் அவங்கவங்க சேனல்ல சைட்ல போட, அது அப்படியே பரவிடுச்சு. என்ன கொடுமைன்னா பிரபலமான சைட்டுகளும் யூடியூப் சேனல்களூம் கூட நல்லா விசாரிக்காம இந்தச் செய்தியை அப்படியே வெளியிடுறாங்க. அந்த மனுஷனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை கூட இருக்கு. இதனால எங்க ரெண்டு பேர் வீட்டுலயும் தேவையில்லாத டென்ஷன்ல இருக்காங்க.

அதனால் சோசியல் மீடியாவுல ஆக்டிவா இருக்கிறவங்களை நான் ஒண்ணே ஒண்ணு கேக்குறேன், செலிபிரிட்டிகள் பத்தின இந்த மாதிரி தகவல் கேள்வி பட்டீங்கனா, தயவு செய்து செக் பண்ணாம ஷேர் பண்ணாதீங்க. முன்னாடி என்னன்னா என் கல்யாணம் நின்னதுக்குகுக் காரணம்னு ஆளாளுக்கு கதை கதையா அளந்து விட்டாங்க. இப்ப என்னடான்னா ஏற்கனவே திருமணமான ஒருத்தரைக் கல்யாணம் பண்ணப்போறேன்னு சொல்றாங்க' என ஆதங்கப் படுகிறார்.

``திவ்யா கணேஷுக்கு முதலில் நடிகர் ஆர்.கே. சுரேஷுடன் முதலில் திருமணம் முடிவானது. ஆனால் என்ன காரணத்தினாலோ தெரியவில்லை பிறகு அது நடக்கவில்லை. அப்பவே தன்னுடைய கல்யாணம் குறித்து வெளியான விதவிதமான செய்திகளால் ரொம்பவே காயப்பட்டிருந்தாங்க அவங்க. இப்ப மறுபடியும் கல்யாணம் தொடர்பா இப்படியொரு வதந்தி கிளம்புனதாலதான் ரொம்பவே படபடப்பாகி அப்செட் ஆகிட்டாங்க'' என்கிறார்கள் திவ்யாவின் நண்பர்கள்.

Bigg Boss Tamil 8: `வெளியேறிய அர்னவ்’ - சக போட்டியாளர்கள் போட்ட ஸ்கெட்ச் தான் காரணமா?

மெது மெதுவாக சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 8. ரவீந்தர், தீபக், ரஞ்சித், சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்களுடன் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கிய நிகழ்ச்சியில் முதல் எவிக்‌ஷன... மேலும் பார்க்க

புதிய தொகுப்பாளர், பெரிய வீடு, மற்றும் ‘ஆண்கள் Vs பெண்கள்’ - பரபரப்பாக நடந்து வரும் பிக் பாஸ்!

பிக் பாஸ் சீசன் 8 அக்டோபர் 6 ஆம் தேதி பிரம்மாண்டமாக 5 மணி நேர தொடக்கவிழாவுடன் துவங்கியது.புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பரவலான பாராட்டுகளைப் பெற... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: `அதைபோய் கிண்டல் பண்ணினா என்ன பண்றது?' - ரஞ்சித் குறித்து மனைவி பிரியா ராமன்

`பிக்பாஸ் தமிழ் சீசன் 8' பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதியின் `நச்' கவனிப்பு பலருக்கும் பிடித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் ரஞ்சித். இவருடைய கேம் பி... மேலும் பார்க்க

Kayal Serial: கல்யாணமே முடிஞ்சாச்சு… கயல் சீரியல் முடிவுக்கு வருகிறதா? - `ட்விஸ்ட்’ வைக்கும் சைத்ரா

கயல் சீரியலில் நாயகி கயலுக்கும் நாயகன் எழிலுக்கும் ஒருவழியாகத் திருமணம் முடிந்துவிட்டது. சுமார் ஒரு மாத காலமாக கயல் சீரியலில் இந்த திருமணம் தொடர்பான காட்சிகள் தான் ஒளிபரப்பட்டது.சீரியல் இந்த கட்டத்திற... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 12: வெடித்த விவகாரம்; சர்ச்சையான அவார்ட் ; வெளியேறப்போவது யார்?

‘சின்னக் காலா இருந்தாலும் நல்லாயிருக்குடா’ என்று ‘காக்கா பிரியாணி’ நகைச்சுவைக் காட்சியில் விவேக் சொல்லுவார். அதைப் போலவே இன்றைய எபிசோடில் எப்படியோ கொஞ்சம் சுவாரசியம் வந்து விட்டது. இப்படியே வண்டியை நக... மேலும் பார்க்க

Serial Update: எதிர்நீச்சல் 2 - `இவருக்கு பதில் இவர்’ டு சன் தொடரில் இவர்களா?

`இவருக்கு பதில் இவர்’எதிர்நீச்சல் 2சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் `எதிர்நீச்சல்'. இந்தத் தொடருக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தத் தொடர் சில காரண... மேலும் பார்க்க