செய்திகள் :

Serial Update: எதிர்நீச்சல் 2 - `இவருக்கு பதில் இவர்’ டு சன் தொடரில் இவர்களா?

post image

சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் `எதிர்நீச்சல்'. இந்தத் தொடருக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தத் தொடர் சில காரணங்களால் சட்டென முடிவுக்கு வந்தது. இந்நிலையில் பலரும் இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் வருமா? என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்நீச்சல் 2

`எதிர்நீச்சல் 2' விரைவில் வரவிருக்கிறது. இந்தத் தொடரில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்திருந்த மதுமிதா இரண்டாம் பாகத்தில் தான் நடிக்கவில்லை என்பதை தனது ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு பதில் யார் நடிப்பார்? என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அந்தக் கதாபாத்திரத்தில் பார்வதி நடிக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

`குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் வெகுவாக கவனிக்கப்பட்டவர் புகழ். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் `கோலி சோடா ரைசிங்'கிலும் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். புகழ் - பென்ஸியா தம்பதியின் மகள் ரித்தன்யா புகழேந்தி. பிறந்து பதினொரு மாதங்களேயான ரித்தன்யா இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இரண்டு ரெக்கார்டுகளை செய்திருக்கிறார்.

புகழ்

பென்ஸியா புகழேந்தி தனது மகள் குறித்துக் குறிப்பிடும் போது, `ரித்தன்யா ஸ்மார்ட் அண்ட் ஆக்டிவ் கேர்ள்' என்கிறார். 45 படிக்கட்டுப் படிகளை 2 மினிட்ஸ் 58 செக்கண்ட்ஸில் ஏறி ரெக்கார்ட் செய்திருக்கிறார் ரித்தன்யா. அதோடு இரண்டாவது வேர்ல்டு ரெக்கார்டாக 2kg தம்பிளை வெயிட் லிஃப்ட் பண்ணி 17 செக்கண்ட்ஸ் கையில் பிடித்திருந்து சாதித்திருக்கிறார். ஒரு பக்கம் பலர் குழந்தையின் சாதனையைப் பாராட்டினாலும் சிலர் குழந்தையை ஏன் கஷ்டப்படுத்துறீங்க? என விமர்சித்தும் இருக்கின்றனர். ஆனால், ரித்தன்யா ஹாப்பியாக சிரித்துக் கொண்டே தான் இரண்டு சாதனைகளையும் செய்திருக்கிறார். 

விஜய் டிவியில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியான `கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பாரத். தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது சீசனிலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சீரியல்

இந்நிலையில் பாரத் சன் டிவியில் புதியதாக வரவிருக்கும் தொடர் ஒன்றில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடரில் அவருக்கு ஜோடியாக `அயலி' வெப் சீரிஸின் மூலம் வரவேற்பை பெற்ற அபி நக்‌ஷத்ரா நாயகியாக நடிக்க இருக்கிறாராம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Kayal Serial: கல்யாணமே முடிஞ்சாச்சு… கயல் சீரியல் முடிவுக்கு வருகிறதா? - `ட்விஸ்ட்’ வைக்கும் சைத்ரா

கயல் சீரியலில் நாயகி கயலுக்கும் நாயகன் எழிலுக்கும் ஒருவழியாகத் திருமணம் முடிந்துவிட்டது. சுமார் ஒரு மாத காலமாக கயல் சீரியலில் இந்த திருமணம் தொடர்பான காட்சிகள் தான் ஒளிபரப்பட்டது.சீரியல் இந்த கட்டத்திற... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 12: வெடித்த விவகாரம்; சர்ச்சையான அவார்ட் ; வெளியேறப்போவது யார்?

‘சின்னக் காலா இருந்தாலும் நல்லாயிருக்குடா’ என்று ‘காக்கா பிரியாணி’ நகைச்சுவைக் காட்சியில் விவேக் சொல்லுவார். அதைப் போலவே இன்றைய எபிசோடில் எப்படியோ கொஞ்சம் சுவாரசியம் வந்து விட்டது. இப்படியே வண்டியை நக... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: காதல் தோல்வி, கன்வின்ஸ் செய்த அர்னவ், மன அழுத்தம் - அன்ஷிதா குறித்து நண்பர்கள்

பிக் பாஸ் சீசன் 8-ல் மெதுவாக சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. மந்தமாகச் சென்றுகொண்டிருந்த எபிசோட்கள் மெல்ல கார சார உரையாடல், டாஸ்க் என நுழைந்திருக்கிறது.பிக்பாஸ் வீடுவிஜய் டிவியில் அக்டோபர் 6-ம் த... மேலும் பார்க்க

BB Tamil 8 Promo: `நீ செஞ்சிருக்கக் கூடாது' வில்லங்க பட்டம்; கலங்கி அழும் அன்ஷிதா

12-வது நாளான இன்றைய எபிசோடில் பல எதிர்பார்ப்புகளுக்கு பதில்கள் கிடைக்கும்.வீக்கெண்டுக்கு எபிசோடுக்கு முன்பாகவே... அதாவது விஜய் சேதுபதியின் எபிசோட் ஒளிபரப்பாகுவதற்கு முந்தைய நாள் அந்த வாரத்தில் நடந்த ட... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 11: `அழுகை; அழுகை; அழுகையோ அழுகை' - தர்ஷாவின் புலம்பல்; அன்ஷிதா நடித்த காதல் காட்சி

மன உளைச்சல் நேரும் சமயங்களில், பொதுவாக ஆண்களின் வெளிப்பாடு கோபமாக இருக்கும் என்றால், பெண்களின் எக்ஸ்பிரஷன் கண்ணீர் வழியாகத்தான் வெளிப்படும். எத்தனையோ நூற்றாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்களின் ... மேலும் பார்க்க

Siragadikka aasai & Kayal: மீனாவால் தூக்கமின்றி தவிக்கும் விஜயா| கயல் திருமணத்தை நிறுத்திய தீபிகா

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் (அக்டோபர் 17) ரோகிணி போட்ட பிளானில் விஜயாமண் அள்ளி போட்டுவிட்டார். போதாக்குறைக்கு மனோஜின் கடையில் ரவுடிகள் புகுந்து பொருள்களை அள்ளிச் சென்றுவிட்டனர்.ரோகிணி மு... மேலும் பார்க்க