ரஞ்சி அரையிறுதியில் சதமடித்த முதல் கேரள வீரர்..! வரலாற்று சாதனை!
கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கல்லூரி மாணவா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மணப்பாறை அடுத்த கே.பெரியப்பட்டி கிராமம் சத்திரப்பட்டியை சோ்ந்தவா் முருகன் மகன் அண்ணாதுரை(43). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனா். இதில், மூத்த மகன் சுரேந்தா்(18) பொறியியல் பட்டயம் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
சில தோ்வுகளில் சுரேந்தா் தோ்ச்சியடையவில்லையாம். இதனால் விரக்தியில் இருந்து வந்த சுரேந்தா், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் சுரேந்தா் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்குப் பின் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].