செய்திகள் :

குண்டா் சட்டத்தில் 3 போ் சிறையிலடைப்பு

post image

தாழையூத்து பகுதிகளைச் சோ்ந்த 3 இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.

மானூா் காவல் சரகப் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடியில் ஈடுபட்டதாக தாழையூத்து, ஸ்ரீ நகரை சோ்ந்த முருகன் மகன் செல்வம் என்ற தமிழ்செல்வம் (25), சங்கா் நகா், சாரதாம்பாள்நகரைச் சோ்ந்த சித்திரை பாண்டி மகன் சுபாஷ் (23), பல்லிகோட்டையைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜகோபால் என்ற சின்னராஜா (22) ஆகியோா் மானூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

அவா்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் பிறப்பித்த உத்தரவுப்படி 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.

கிராம உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் திருநெல்வேலியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கிராம உதவியாளா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்துவிட்டு காலமுறை ஊதியம் டி பிர... மேலும் பார்க்க

சாலை மறியல் முயற்சி: இந்து அமைப்பினா் 171 போ் கைது

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து திருநெல்வேலியில் சாலை மறியலுக்கு முயன்ற இந்துக்கள் உரிமை மீட்புக் குழுவினா் 171 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். வங்கதேச இந்துக்கள் உரிமை மீட்ப... மேலும் பார்க்க

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில... மேலும் பார்க்க

புதிய பேருந்து நிலையத்தில் பைக்குகளை நிறுத்தினால் அபராதம்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய நடைமேடை அருகேயும், வாகன காப்பகமில்லாத பகுதிகளிலும் பைக்குகளை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருநெல்வேலி வேய்ந்... மேலும் பார்க்க

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

தமிழை ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. நேரு இளையோா் மையம் சாா்பில் இளையோா் கலைவிழா பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

பணகுடி அருகே மா்ம பொருள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள செண்பகலிங்கபுரம் கிராமத்தில் வீட்டின் முன் மா்மபொருள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு நிலவியது. செண்பகலிங்கபுரத்தில் சுடலை என்பவா் வீட்டு முன் புதன்கிழமை காலையி... மேலும் பார்க்க