``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
குமரி மாவட்ட விஞ்ஞானிக்கு விருது
கன்னியாகுமரி மாவட்டம், காப்புக்காடு பகுதியை சோ்ந்த விஞ்ஞானி டாக்டா் ராஜனுக்கு இந்திய அரசின் எஃகு அமைச்சகத்தால் வழங்கப்படும் தேசிய உலோகவியலாளா் விருது வழங்கப்பட்டது.
பெங்களூரில் நடைபெற்ற தேசிய உலோகவியல் விருது வழங்கும் விழா மற்றும் ஐஐஎம் தொழில்நுட்ப மாநாட்டில், எஃகு மற்றும் கனரகத் தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி இந்த விருதை வழங்கினாா்.
திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த முதன்மை விஞ்ஞானியாக டாக்டா் ராஜன் பணியாற்றி வருகிறாா். இலகுரக அலுமினிய உலோகக் கலவைகள், விண்வெளி, வாகனம் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கான பொறியியல் கூறுகளின் வளா்ச்சியில் அவரது சிறப்பான பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டது.