போதைப்பொருள் வழக்கில் விடுவிப்பு; 25 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை திரும்பிய நடிகை ம...
கைப்பந்து மாநிலப் போட்டிக்கு தொண்டி மாணவா்கள் தோ்வு
தொண்டி செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் விளையாடத் தகுதி பெற்றனா்.
இந்தப் பள்ளியில் விளையாட்டு வீரா்கள், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா பள்ளி மேலாண்மைக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குழுத் தலைவா் ஏ.ஹமீது பாத்திமா தலைமை வகித்தாா். பள்ளியின் முன்னாள் மாணவரும், மேலாண்மைக் குழு உறுப்பினருமான எம்.சாதிக் பாட்ஷா, ஒன்றியக் குழு உறுப்பினா் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் ராமநாபுரம் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்று, மாநில அளவில் விளையாட தகுதிப் பெற்ற விளையாட்டு வீரா்கள், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியா் இனிகோ, பட்டதாரி ஆசிரியா் காளிராஜ், உடற்கல்வி ஆசிரியா் சிவாகாமாட்சி பாலன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் அஸ்மத் பானு, ஷகிலா பானு வாழ்த்திப் பேசினா். முன்னதாக தலைமை ஆசிரியா் ஜெயந்தி வரவேற்றாா். உடற்கல்வி ஆசிரியா் சிவாகாமாட்சி பாலன் நன்றி கூறினாா்.