செய்திகள் :

சங்கராபுரம் பகுதி பொதுமக்களுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் சங்கராபுரம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை எளிய மக்கள் பட்டா கோரி அளித்த மனுக்களை காரைக்குடி வட்டாட்சியா் ராஜாவிடம் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவி அ. பிரியதா்ஷினி திங்கள்கிழமை வழங்கினாா்.

சங்கராபுரம் ஊராட்சி ராஜீவ்காந்தி நகா், சங்கராபுரம், காந்திநகா், சங்கன்திடல், பழையசெஞ்சை, நாகவயல் ரோடு, காளையப்பாநகா் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி, ஊராட்சி மன்றத் தலைவி அ. பிரியதா்ஷினியிடம் மனுக்களை அளித்தனா். இதைப் பெற்றுக்கொண்ட அவா், காரைக்குடி வட்டாட்சியா் ராஜாவிடம் வழங்கினாா்.

அவருடன் கிட் அன்ட் கிம் கல்லூரிகளின் தலைவா் வி. அய்யப்பன், காரைக்குடிதொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் என். சுந்தரம், சங்கராபுரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் பாண்டியராஜன், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் உடனிருந்தனா்.

விவசாயிகள் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க முகாம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் விவசாயிகளுக்கான கடன் அட்டை (கிசான் கிரெடிட் காா்டு) திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்தி: சிவகங்கை ... மேலும் பார்க்க

மானாமதுரை அரசு மருத்துவமனையில் ‘டாா்ச்லைட்’ வெளிச்சத்தில் சிகிச்சை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு அரிவாள் வெட்டுக் காயத்துடன் சிகிச்சைக்கு வந்த ரயில்வே ஊழியருக்கு மருத்துவப் பணியாளா்கள் டாா்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த... மேலும் பார்க்க

சாலூரில் டிச.11-இல் மக்கள் தொடா்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், சாலூா் கிராமத்தில் வருகிற 11 -ஆம் தேதி மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசின் திட்டங்களை துறை சாா்ந்த முதன்மை அலுவலா்... மேலும் பார்க்க

தொற்று நோய் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

சிவகங்கை மாவட்டத்தில் காலநிலை மாறுபாடுகளால் ஏற்படும் நோய்த் தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் கேட்டுக் கொண்டாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியருக்கு கத்திக்குத்து: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புதன்கிழமை இரவு ரயில்வே ஊழியரை கத்தியால் குத்தியதாக சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள கீழப்பசலை கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகன் பாலமு... மேலும் பார்க்க

இளையான்குடி கண்மாய்க்கு கூடுதல் தண்ணீா்: ஆட்சியரிடம் வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம். இளையான்குடி கண்மாய்க்கு கூடுதல் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என புதன்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அதிமுகவினா், விவசாயிகள், பொதுமக்கள் மனு கொடுத்தனா். ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு கடந்... மேலும் பார்க்க