சர்வதேச கிரிக்கெட்டில் ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் சாதனை!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர்களான ஹார்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் சாதனை படைத்துள்ளனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 14 ஆயிரம் ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை!
ஹார்திக், குல்தீப் சாதனை
இன்றையப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இருவரும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஹார்திக் பாண்டியா 200 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 300 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
இதையும் படிக்க: இந்தியாவை எப்படியாவது வென்றுவிடுங்கள்: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்
ஹார்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் 17 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 89 விக்கெட்டுகள் மற்றும் டி20 போட்டிகளில் 94 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் 56 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 177 விக்கெட்டுகள் மற்றும் டி20 போட்டிகளில் 69 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.