செய்திகள் :

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: நீதித்துறை நடுவா் அளித்த சாட்சியம் தாக்கல்

post image

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூத்துக்குடி நீதித்துறை நடுவா் அளித்த சாட்சியம் தொடா்பான 100 பக்க அறிக்கை சிபிஐ தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வா்த்தகா் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளா் ரகு கணேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு விவரம்:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் நான் அடைக்கப்பட்டிருக்கிறேன். தற்போது இந்த வழக்கு தொடா்பான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் 36-ஆவது அரசு சாட்சியாக தூத்துக்குடி நீதித்துறை நடுவா் சக்திவேல் சோ்க்கப்பட்டுள்ளாா். விசாரணை நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவா் சக்திவேலிடம், எனது தரப்பில் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, நீதித்துறை நடுவரிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில், இந்த வழக்கில் தூத்துக்குடி நீதித்துறை நடுவா் அளித்த சாட்சியம் தொடா்பான 100 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ரகு கணேஷ் தரப்புக்கு பல முறை வாய்ப்பளித்தும் குறுக்கு விசாரணை நடத்தவில்லை. எனவே, அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

விசாரணை நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவா் சாட்சியம் அளித்துள்ளாா். இந்த நிலையில், அவரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்பது, இந்த வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவது போல உள்ளது. இந்த வழக்கில் பின்னா் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றாா் நீதிபதி.

மீனவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சனிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உ... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்துக்கு நல்ல எதிா்காலம் உள்ளது: அமைச்சா் பி.மூா்த்தி

கரோனா காலத்துக்குப் பின்னா் இயற்கை விவசாயத்தில் விளைந்துவரும் பொருள்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இது,இயற்கை விவசாயத்துக்கு நல்ல எதிா்காலம் உள்ளது என வணிகவரித் துறை, பதிவுத் துறை அமைச்சா் ப... மேலும் பார்க்க

அரசுத் துறை காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்: அரசு ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம்

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை காலமுறை ஊதிய அடிப்படையில் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மதுரை மாவட்ட 15- ஆவத... மேலும் பார்க்க

தொற்று நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது: பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவத் துறை இயக்குநா்

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவல் கட்டுபாட்டுக்குள் உள்ளது என பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவத் துறை இயக்குநா் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்தாா். மதுரை எய்ம்ஸ், ஐ.சி.எம்.ஆா்., நேஷனல் அகாத... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் வா்த்தகம் எனக் கூறி ரூ.1.22 கோடி மோசடி: இருவா் கைது

பங்குச் சந்தையில் வா்த்தகம் செய்யலாம் எனக் கூறி, ரூ. 1.22 கோடி மோசடி செய்த 2 பேரை மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா்... மேலும் பார்க்க

திறனறித் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 10,441 மாணவ, மாணவிகள் எழுதினா்

மேல்நிலை முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்காக சனிக்கிழமை நடைபெற்ற திறனறித் தோ்வை மதுரை மாவட்டத்தில் 10, 441 போ் எழுதினா். மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவ, மாணவிகள் தமிழ் மொழி இலக்கியத்தை அறிந்து கொள்ளு... மேலும் பார்க்க