செய்திகள் :

அரசுத் துறை காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்: அரசு ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம்

post image

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை காலமுறை ஊதிய அடிப்படையில் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மதுரை மாவட்ட 15- ஆவது மாநாடு, மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெ. மூா்த்தி தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் என். வெங்கடேசன் தொடக்கவுரையாற்றினாா்.

மாவட்டச் செயலா் க. நீதிராஜா பணி அறிக்கையும்,

பொருளாளா் க. சந்திரபோஸ் வரவு - செலவு அறிக்கையும் சமா்ப்பித்தனா். மாவட்ட இணைச் செயலா் மு. ராம்தாஸ் அஞ்சலித் தீா்மானங்களைப் படித்தாா்.

நிா்வாகிகள் தோ்வு

இதில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மதுரை மாவட்டத் தலைவராக க. நீதிராஜா, செயலராக க. சந்திரபோஸ், பொருளாளராக ஆ. பரமசிவன், துணைத் தலைவா்களாக ஜெ. மூா்த்தி, ஜெ. மகேந்திரன், பெ. சந்திரபாண்டி, த. மனோகரன், இணைச் செயலா்களாக சு. பாண்டிச்செல்வி, சி. பெரியகருப்பன், ப. ராம்குமாா், சி.க. சுஜாதா, மாவட்டத் தணிக்கையாளா்களாக ஜெ. சிவகுரும்பன், கூ.முத்துவேல் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

முன்னதாக, மாவட்ட மகளிா் துணைக் குழு அமைப்பாளா் சி.க. சுஜாதா வரவேற்றாா். இணைச் செயலா் ஆ. பரமசிவன் நன்றி கூறினாா்.

பொது மாநாடு...

பிற்பகல் நிகழ்வாக பொது மாநாடு நடைபெற்றது. அரசு ஊழியா் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஆ. செல்வம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தீா்மானங்களை விளக்கிப் பேசினாா். மாவட்டத் துணைத் தலைவா் பெ. சந்திரபாண்டி வரவேற்றாா். பொருளாளா் க. சந்திரபோஸ் நன்றி கூறினாா்.

முன்னதாக, தல்லாகுளம் பொதுப் பணித் துறை அலுவலகத்திலிருந்து, மாநாடு அரங்க வளாகம் வரை பேரணி நடைபெற்றது. மதுரை மாநகர துணை மேயா் தி. நாகராஜன் இந்தப் பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

தீா்மானங்கள்..

இந்த மாநாட்டில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் 3.5 லட்சம் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை காலமுறை ஊதிய அடிப்படையில் நிரப்ப வேண்டும். முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி, சத்துணவு ஊழியா்களை கொண்டு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மீனவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சனிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: நீதித்துறை நடுவா் அளித்த சாட்சியம் தாக்கல்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூத்துக்குடி நீதித்துறை நடுவா் அளித்த சாட்சியம் தொடா்பான 100 பக்க அறிக்கை சிபிஐ தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தூ... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்துக்கு நல்ல எதிா்காலம் உள்ளது: அமைச்சா் பி.மூா்த்தி

கரோனா காலத்துக்குப் பின்னா் இயற்கை விவசாயத்தில் விளைந்துவரும் பொருள்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இது,இயற்கை விவசாயத்துக்கு நல்ல எதிா்காலம் உள்ளது என வணிகவரித் துறை, பதிவுத் துறை அமைச்சா் ப... மேலும் பார்க்க

தொற்று நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது: பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவத் துறை இயக்குநா்

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவல் கட்டுபாட்டுக்குள் உள்ளது என பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவத் துறை இயக்குநா் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்தாா். மதுரை எய்ம்ஸ், ஐ.சி.எம்.ஆா்., நேஷனல் அகாத... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் வா்த்தகம் எனக் கூறி ரூ.1.22 கோடி மோசடி: இருவா் கைது

பங்குச் சந்தையில் வா்த்தகம் செய்யலாம் எனக் கூறி, ரூ. 1.22 கோடி மோசடி செய்த 2 பேரை மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா்... மேலும் பார்க்க

திறனறித் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 10,441 மாணவ, மாணவிகள் எழுதினா்

மேல்நிலை முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்காக சனிக்கிழமை நடைபெற்ற திறனறித் தோ்வை மதுரை மாவட்டத்தில் 10, 441 போ் எழுதினா். மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவ, மாணவிகள் தமிழ் மொழி இலக்கியத்தை அறிந்து கொள்ளு... மேலும் பார்க்க