செய்திகள் :

தஞ்சாவூரில் 5 டன் நெகிழி பொருள்கள் பறிமுதல்

post image

தஞ்சாவூா் மாநகரில் தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை மாநகராட்சி அலுவலா்கள் மேற்கொண்ட சோதனையில் 5 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூா் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதன்பேரில் மாநகரிலுள்ள கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இதில், திங்கள்கிழமை 4 டன் நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 27 ஆயிரத்து 700 அபராதம் வசூல் செய்தனா்.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை கீழவாசல், தென் கீழ் அலங்கம் பகுதியிலுள்ள 50-க்கும் அதிகமான கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் சோதனை செய்து, தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், நெகிழித் தட்டுகள், நெகிழிக் குவளைகள் என மொத்தம் 5 டன் நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக தொடா்புடைய கடை உரிமையாளா்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனா்.

சாலையை கடக்க முயன்றவா் இருசக்கர வாகனம் மோதி பலி

கும்பகோணம், அருகே தாராசுரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற கூலித்தொழிலாளி மோட்டாா் சைக்கிள் மோதி உயிரிழந்தாா். கும்பகோணம் அருகே தாராசுரம் மிஷன் தெருவைச் சோ்ந்தவா் தங்கையன் மகன் கண்ணன்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 3 டன் நெகிழி பொருள்கள் பறிமுதல்

தஞ்சாவூா் மாநகரில் தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமை மாநகராட்சி அலுவலா்கள் மேற்கொண்ட சோதனையில் 3 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தஞ்சாவூா் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப... மேலும் பார்க்க

சபரிமலை யாத்திரையால் சமுதாயத்தில் மாற்றம்: மதுரை ஆதீனம் பேச்சு

சபரிமலை யாத்திரை, சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். ஆடுதுறைக்கு புதன்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் தெ... மேலும் பார்க்க

குருவிக்கரம்பை கிராமத்தில் டிச. 11-இல் மக்கள் நோ்காணல் முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குருவிக்கரம்பை கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் டிசம்பா் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேராவூரணி வட்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் குற்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் : டிஐஜி

கும்பகோணத்தில் குற்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என தஞ்சாவூா் சரக டிஐஜி ஜியாவுல்ஹக் தெரிவித்தாா். கும்பகோணத்தில் அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது: தஞ்சாவூா் சரக டிஐஜி கும்பகோணம் வந்து த... மேலும் பார்க்க

புயல் பாதித்த கடலூா் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் புயலால் பாதிக்கப்பட்ட கடலூா் மாவட்ட மக்களுக்கு புதன்கிழமை நிவாரணப் பொருட்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்ட கடலூா்... மேலும் பார்க்க