செய்திகள் :

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: `பக்திச் சிரத்தையோடும், துல்லியமாகவும் பாடுவேன்' - ஆளுநரின் பதில்

post image

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி வரும்போது அதை மட்டும் புறக்கணித்துவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடலைப் பாடிய சம்பவம் தற்போது பெரும் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது.

ஆளுநர் ரவி - முதல்வர் ஸ்டாலின்

இதில், பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழவே, கவனக்குறைவாகத் தவறு நடந்துவிட்டதாகவும், தமிழையோ, தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை எனவும் தூர்தர்ஷன் தமிழ் மன்னிப்பு கேட்டது. மறுபக்கம், இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்துகொண்டதைத் தவிர அவருக்கோ, ஆளுநர் அலுவலகத்துக்கோ இதில் எந்த சம்பந்தமும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கமளித்தார். இதற்கிடையில், `திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?' எனக் கேள்வியெழுப்பிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என்று வலிலியுறுத்தினர்.

இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி, ``முதல்வர் ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார். ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன்.

ஸ்டாலின்

அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்." என ஆளுநர் அலுவலக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: `ஆளுநருக்குச் சில கேள்விகள்..!" - முதல்வர் ஸ்டாலின்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தின... மேலும் பார்க்க

ஸ்டாலினிடம் சரணடைந்த Thiruma, Congress, CPM, CPI? கொதிக்கும் நிர்வாகிகள் - கூட்டணி குஸ்தி! JV Breaks

திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக உள்ளிட்ட மெகா கூட்டணி அமைத்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. திமுக ஆட்சியின் மீதும் எக்கச்சக்கமான புகார்கள், குற்றச்சாட்டுகள் உள்ளன . விசிக மது ஒழிப்பு ... மேலும் பார்க்க

`இந்தி திணிக்கப்படவில்லை... தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்கும் முயற்சி நடக்கிறது' - ஆளுநர் ரவி

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடு, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி இந்த நிகழ்ச்சியில... மேலும் பார்க்க

`எங்கள் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ்; திமுக-வில் யார் ஸ்டாலினா... உதயநிதியா?' - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

"மீண்டும் அதிமுக ஆட்சி மலர தடையாய் இருந்தவர்கள் இன்றைக்கு கட்சி வேட்டி கட்டமுடியாமல் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்..." என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்... மேலும் பார்க்க