செய்திகள் :

தலித் இளைஞர் கொலை வழக்கு: ஆந்திர முன்னாள் அமைச்சரின் மகன் கைது!

post image

தலித் இளைஞரின் கொலை வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பினிேபே விஸ்வரூப்பின் மகன் பினிபே ஸ்ரீகாந்தை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளார்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் நடந்த கலவரத்திற்குப் பிறகு, ஜூன் 6, 2022 அன்று துர்கா பிரசாத் என்ற தலித் இளைஞர் கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்டவரின் புகாரின்பேரில் கடந்த சில நாள்களாக ஸ்ரீகாந்தை போலீஸார் தேடிவந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் மதுரையில் கடந்த அக்.18ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மதுரையில் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஆந்திர மாநிலத்திற்குக் கொண்டு செல்வதற்கான அனுமதி கிடைத்தபின்னர், காவல்துறையினரால் ஆந்திரத்துக்கு ஸ்ரீகாந்த் அழைத்து வரப்பட்டார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முந்தைய அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் விஸ்வரூப். கடந்த 2022ல் கோனசீமா மாவட்டத்தின் பெயர் மாற்றம் தொடர்பான வன்முறையின்போது அமலாபுரத்தில் உள்ள அவரது வீடு ஒரு கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இருப்பினும், அமைச்சரும் அவரது குடும்பத்தாரும் வீட்டில் இல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

கைதுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். நான் ஒரு மருத்துவர். எனக்கு உயிரைக் காப்பாற்ற மட்டுமே தெரியும். இந்த வழக்கில் தன்னைச் சட்டவிரோதமாகக் கைது செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

துர்கா பிரசாத் ஸ்ரீகாந்த்தின் கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்று வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

தலித் இளைஞரின் கொலைக்கான காரணம் தெரியவில்லை. திட்டமிட்டு சதி செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீகாந்திடம் ஆந்திர போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிர தேர்தல்: பாஜகவுடன் உத்தவ் தாக்கரே (சிவசேனை) பேச்சுவார்த்தை?

இந்திய அரசமைப்பின் எதிரிகளை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்கு சிவசேனை(உத்தவ் அணி) கட்சி அழைப்பு விடுத்துள்ளது.மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்... மேலும் பார்க்க

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி! - ஒடிசா நடிகர் பதிவால் சர்ச்சை

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என ஒடிசா நடிகர் புத்ததித்யா மொகந்தி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'ஜெர... மேலும் பார்க்க

ஹரியாணா: அக்.25ல் தற்காலிக அவைத் தலைவராகப் பதவியேற்கிறார் ரகுவீர் சிங்!

சண்டீகர்: ஹரியாணா சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அக்டோபர் 25-ம் தேதி பதவியேற்றுக்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 15வது ஹரியாணா சட்டப் பேரவையின் தற்காலிக அவைத்தல... மேலும் பார்க்க

101-ஆவது பிறந்த நாளை கொண்டாடினாா் வி.எஸ்.அச்சுதானந்தன்

மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் தனது 101-ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை (அக். 20) கொண்டாடினாா். கேரள முதல்வா் பினராயி விஜயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநி... மேலும் பார்க்க

போலி வெடிகுண்டு மிரட்டல்கள்... குற்றவாளிகள் விமானங்களில் பறக்கத் தடையா?

விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றவாளிகளை விமானங்களில் பறப்பதற்கானத் தடை பட்டியலில் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பதாக சிவில் விமான போக்குவரத்துத் துற... மேலும் பார்க்க

தில்லியில் சட்டம் ஒழுங்கை கையாள பாஜகவால் இயலவில்லை: ஆம் ஆத்மி

தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாகச் சாடியது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சௌரப் பரத்வாஜ் கூறியது, மக்களைக் குறிவைத... மேலும் பார்க்க