செய்திகள் :

திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாணுக்கு நீதிமன்றம் சம்மன்!

post image

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்ட கலப்பட நெய் பயன்படுத்தப்படுவதாகப் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு ஹைதராபாத் சிவில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய திருப்பதி லட்டு விவகாரத்தில் ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்துமாறுப் பேசியதாகக் கூறி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்கறிஞர் ராமா ராவ் இம்மானேனி வழக்கு தொடர்ந்துள்ளார்,

இதனைத் தொடர்ந்து, வருகிற நவம்பர் 22 அன்று நேரில் ஆஜராகுமாறு ஹைதராபாத் சிவில் நீதிமன்றம் பவன் கல்யாணுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

தெலங்கானாவில் உள்ள பல இணையதளங்கள் மற்றும், சமூக வலைதளங்களில் பவன் கல்யாண் வெளியிட்ட அறிக்கை பகிரப்பட்டதாக மனுதாரர் கூறியதால், தெலங்கானா தலைமைச் செயலர் சாந்தி குமாரிக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், பகிரப்பட்டப் பதிவுகளை தெலங்கானா அரசு நீக்கவேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிக்க | லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு! -கர்னி சேனை அறிவிப்பு

இது தொடர்பாகப் பேசிய மனுதாரரான வழக்கறிஞர் ராமா ராவ் இம்மானேனி, “நாங்கள் ஹிந்து மத நம்பிக்கைகளைக் முழுமையாகக் கடைபிடித்து வருகிறோம். பவன் கல்யான் தெலங்கானாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும் அவரது இழிவுபடுத்தும் விதமான, அவதூறான பேச்சால் நாங்கள் மிகவும் புண்பட்டுள்ளோம்” என்று கூறினார்.

மேலும், “கடந்த செப்டம்பர் 20 முதல் 22 வரையிலான நாள்களில் திருப்பதி பிரசாதத்தில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை கலந்ததாக எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி பவன் கல்யாண் தனது வெறுப்புப் பேச்சால் குற்றம் சாட்டியிருந்தார்.

திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்குப் படைக்கப்படும் பிராசாதம் மீது அவதூறு பரப்பிய பவன் கல்யாண் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுக்கு இத்தகைய சர்ச்சைக்குரியக் கருத்துக்களைத் தெரிவிக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்” என்று மனுதாரர் தெரிவித்தார்.

பிரியங்காவின் பேரணியில் கட்சிக் கொடிகளுக்கு அனுமதி!

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் கட்சிக் கொடிகளைப் பயன்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்த... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய மசோதா: நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் திரிணமூல் எம்பிக்கு காயம்

புது தில்லி: வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆராயும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்... மேலும் பார்க்க

இந்தியா - சீனா மோதல் முடிவுக்குக் கொண்டுவரப்படுமா?

கிழக்கு லடாக்கில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள சீனா முன்வந்துள்ளது.சமீப காலங்களில், இந்தியா - சீனா இடையே நடைபெற்று வந்த மோதல்கள் தொடர்பாக... மேலும் பார்க்க

பிரியங்காவை விடச் சிறந்த பிரதிநிதியைக் கற்பனை செய்ய முடியாது: ராகுல்

வயநாடு மக்களவை இடைத்தேர்தலுக்குக் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் "தனது சகோதரியை விட சிறந்த பிரநிதியை என்னால் கற்பனை செய்ய முடியாது" என்று ராகுலி காந்தி தெ... மேலும் பார்க்க

எப்போது கரையை கடக்கிறது டானா புயல்? தயாராகிறதா ஒடிசா?

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் நிலையில், அது அக்டோபர் 24ஆம் தேதி ஒடிசாவின் புரி - மேற்கு வங்கத்தின் சாகர் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் ... மேலும் பார்க்க

ரஷியா சென்றடைந்தார் மோடி!

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு நடைபெறும் ரஷியாவின் கசான் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார்.இரண்டு நாள் பயணமாக ரஷியாவின் கசானுக்கு இன்று காலை தில்லியில் இருந்து புறப்பட்டுச் ச... மேலும் பார்க்க