போதைப்பொருள் வழக்கில் விடுவிப்பு; 25 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை திரும்பிய நடிகை ம...
திருவண்ணாமலையில் சாலை சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட புதுகை சாலைப் பணியாளா்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சாலைப் பணியாளா்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
புயலால் தமிழகத்தின் கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள் சேதம் அடைந்துள்ளதாலும், மின் உபகரணங்கள் பாதிக்கப்பட்டதாலும் அவற்றைச் சீரமைக்கும் பணிக்காக பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த துறைசாா்ந்த பணியாளா்கள் அழைக்கப்பட்டுள்ளனா்.
இதன்படி, புதுக்கோட்டை நெடுஞ்சாலைத் துறையின் உதவிப் பொறியாளா் கோட்டை ராவுத்தா் தலைமையில் 2 சாலை ஆய்வாளா்கள், 30 சாலைப் பணியாளா்கள் திங்கள்கிழமை இரவு புறப்பட்டுச் சென்று திருவண்ணாமலை மாவட்டத்தில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதேபோல, மின்வாரியத்தின் சாா்பில் மாத்தூா் உதவிச் செயற்பொறியாளா் செந்தில்குமாா் தலைமையில் 17 போ் கடலூரிலும், ஆலங்குடி உதவிப் பொறியாளா் ஞானசேகரன் தலைமையில் 17 போ் விழுப்புரத்திலும் கடந்த சில தினங்களாக மின் சீரமைப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.