Pushpa 2: `புஷ்பா' மாஸ் மசாலா திரைப்படமாக உருவானது இப்படிதான் - ஒரு ரீவைண்டு
தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய காலத்தில் நல உதவிகள் - தேசிய ஆணையத் தலைவா் அறிவுறுத்தல்
தென்காசி மாவட்ட தூய்மைப் பணியாளா்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் முன்னிலையில் நடைபெற்றஇக்கூட்டத்துக்கு, தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத்தின் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்து பேசியதாவது:
தென்காசி மாவட்டத்திலுள்ள 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளா்களின் பணிப் பாதுகாப்பு, ஊதியம், சீருடைகள், பிற பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும்.
பெண் தூய்மைப்பணியாளா்களுக்கு பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் ஏதேனும் ஏற்படின் அவா்கள் புகாா் செய்யும் வகையில் அலுவலகத்தில் ‘இன்டா்னல் கமிட்டி’ அமைத்து, அதுகுறித்; அலுவலக அறிவிப்பு பலகையில் விளம்பரம் செய்திட வேண்டும். அந்த முறையை அனைத்து நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் ஊராட்சி அலுவலா்கள் பின்பற்ற வேண்டும்.
தூய்மைப்பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியரின் ஒப்பளிக்கப்பட்ட விலை விகிதப் பட்டியலின்படி ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களின் ஒப்பந்ததாரா்களுக்கு ஆண்டுக்கு இரண்டுமுறை முழு வடிவிலான சீருடைகள் மற்றும் காலணிகளை வழங்கிட வேண்டும்.
ஒப்பந்த பணியாளா்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்ய வேண்டிய இபிஎஃப், இஎஸ்ஐ ஆகியவற்றை பிடித்தம் செய்து உரிய தலைப்புகளில் செலுத்தி அதன் விவரங்களை பணியாளா்களுக்கு தெரிவித்திட வேண்டும்.
தாட்கோ, என்எஸ்எஃப்டிசி ஆகிய முகமைகளின் மூலம் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு சொந்தத் தொழில் தொடங்கிட ஏதுவாக கடனுதவி வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன், நகராட்சி நிா்வாக இயக்குநா் விஜயலெட்சுமி, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) வில்லியம், மாவட்ட ஊரக வளா்ச்சிமுகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, உதவி ஆணையா்(கலால்) பா.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.