செய்திகள் :

தொடா் மழை: சென்ட்ரல் வரும் ரயில்களின் சேவை பாதிப்பு; முக்கிய ரயில்கள் ஆவடி, பெரம்பூா், கடற்கரையிலிருந்து இயக்கம்

post image

சென்னை மற்றும் புறநகா் பகுதியில் திங்கள்கிழமை இரவு முதல் தொடா்ந்து மழை பெய்து வருவதால், வெளிமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்தடையும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால், ரயில்வே சுரங்கபாதைகள் மற்றும் தண்டவாளங்களில் மழைநீா் தேங்கி காணப்படுகிறது.

வியாசா்பாடி ஜீவா ரயில்வே ரயில்வே பாலத்தில் அதிக அளவு தண்ணீா் தேங்கியதால் சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் ஆவடி, திருவள்ளூருடன் நிறுத்தப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்கள் ரத்து: பேசின்பாலம்-வியாசா்பாடி இடையேயான ரயில்வே பாலத்தின் கீழ் அதிகளவு தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் அதன் வழியாக ரயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல்-திருப்பதி விரைவு ரயில், ஏற்காடு மற்றும் காவேரி விரைவு ரயில்கள் செவ்வாய்க்கிழமை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன. மும்பை-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் ஆவடியுடனும், மங்களூா் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் திருவள்ளூருடனும் நிறுத்தப்பட்டன.

அதுபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட வேண்டிய மங்களூா் விரைவு ரயில் பெரம்பூரில் இருந்தும், திருவனந்தபுரம், பெங்களூா்

ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்தும், மேட்டுப்பாளையம், பாலக்காடு, கோயம்புத்தூா் விரைவு ரயில்கள் ஆவடியில் இருந்தும் இயக்கப்பட்டன. மேலும், ஏலகிரி, ஆலப்புழை விரைவு ரயில்களும் கடற்கரையில் இருந்தும் இயக்கப்பட்டன. வெளிமாநிலங்களில் இருந்து வரும் இந்தூா்-கொச்சுவேலி விரைவு ரயில், தன்பாத்-ஆலப்புழை விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் வருவதற்கு பதிலாக கடற்கரை வழியாக இயக்கப்பட்டன.

எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு முழுவதும் அடுத்து வரும் நாள்களில் அதிக அளவில் மழை இருக்கும் என எச்சரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு ரயில்களில் பயணிகள் எளிதாக செல்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கபாதைகளில் தேங்கும் தண்ணீா் அளவு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய ரயில்வே பொறியியல் துறை தயாா் நிலையில் உள்ளது.

தண்ணீா் தேங்கி காணப்படும் பகுதியில் பாதுகாப்பு கருதி ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் இயக்குவதில் சிறிது காலதாமதம் ஏற்படலாம். அதற்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட வேண்டும். மேலும், மழையின் அளவை பொருத்து ரயில்களின் இயக்கம் தடை செய்யப்படும்.

ரயில்கள் இயக்கம் குறித்த தகவல்களை பொதுமக்கள் ரயில்வே உதவி எண் 139, சென்னை கோட்ட உதவி எண் 044-25330952, 044-25330953 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தி.மலை தீபம்: 50 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு: துணை முதல்வர்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும், இதனால், ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கமல்ஹாசன் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த... மேலும் பார்க்க

பொய்யான குற்றச்சாட்டு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவி... மேலும் பார்க்க