செய்திகள் :

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடக்கிவைத்தார் பிரதமர்!

post image

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று(சனிக்கிழமை) தொடக்கிவைத்தார்.

இந்திய பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளா்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் 100% சதவீத 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு 29,000-30,000 கிராமங்களில் புதிதாக 97,500 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒடிசாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, சுதேசி 4ஜி சேவையையும் இன்று காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார்.

இதன்மூலம் உள்நாட்டிலேயே தொலைத்தொடா்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் டென்மாா்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் 5-ஆவது நாடாக இந்தியாவும் இணைகிறது.

ஜெய்ப்பூர் வர்த்தக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒடிசா ஜார்சுகுடா நிகழ்ச்சியில் இதுகுறித்துப் பேசிய பிரதமர் மோடி,

"உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு 4ஜி சேவைகளைத் தொடங்கிய உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. பிஎஸ்என்எல் மூலமாக இந்தியா உலகளாவிய தொலைதொடர்பு உற்பத்தி மையமாக மாறுகிறது.

சுதேசி 4ஜி இணைய சேவை இன்று இங்கிருந்து தொடக்கிவைக்கிறேன். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1 லட்சம் 4ஜி மொபைல் கோபுரங்கள் இன்று பயன்பாட்டுக்கு வருகின்றன.

அதிவேக இணையம் பெறாத பகுதிகள், கிராமங்கள் இதன் மூலமாக பயன்பெறும். எல்லையில் உள்ள நமது வீரர்களும் பாதுகாப்பான அதிவேகமான உள்நாட்டு சேவைகளை இனி பயன்படுத்த முடியும்" என்று கூறினார்.

PM Modi inaugurated the indigenous BSNL 4G network via video conferencing in jaipur

இதையும் படிக்க | போர் முடிந்த பிறகு பதவி விலகுவேன்; மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன்: ஸெலென்ஸ்கி

70 வயதில் இப்படிப் பேசலாமா? -பாஜக அமைச்சரை விமர்சிக்கும் காங்.! என்ன நடந்தது?

70 வயதைக் கடந்துவிட்ட பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பொதுவெளியில் ராகுல் - பிரியங்கா காந்தி உறவை விமர்சித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.மத்திய பிரதேச மாநில பாஜக மூத்த தலைவரும் அம்மாநில நகர்ப்பு... மேலும் பார்க்க

மணிப்பூரில் 330 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்கள் அழிப்பு

மணிப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட 330 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்கள் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டன. மணிப்பூரின், இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஷிஜா பொது உயிரியல் மருத்துவக் கழிவு சுத்திகர... மேலும் பார்க்க

அமைதி, மகிழ்ச்சியால் உலகம் நிரம்பட்டும்! மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் செய்தி

உலகம் முழுவதும் அமைதி மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பப்படட்டும் என்று மாதா அமிர்தானந்தமயி, தன்னுடைய பிறந்த நாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.அம்மா என அன்புடன் மக்களால் அழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமயிய... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் மோதி 5 மாணவர்கள் பலி!

தில்லி - குருகிராம் விரைவுச் சாலையில் கார் விபத்தில் 5 பேர் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்திலிருந்து குருகிராம் செல்வதற்காக தில்லி - குருகிராம் விரைவுச் சாலையில், சனிக்கிழமையில் தார் காரில் வேகமாக 6 பேர்... மேலும் பார்க்க

பிகாரில் 2வது நாளாக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அமித் ஷா!

பிகாரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்துரையாடினார். இந்தாண்டு இறுதியில் பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அரசியல் தலைவர்கள் பி... மேலும் பார்க்க

பாஜக அமைச்சர் மீது முன்னாள் குடியரசுத் தலைவரின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

மகாராஷ்டிர அமைச்சர் ஜெயகுமார் ராவல், தங்களது பாரம்பரிய நிலத்தை சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்துள்ளதாக, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மகாராஷ்டிரத... மேலும் பார்க்க