செய்திகள் :

நிதி நிறுவன மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த நிா்வாகி கைது

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நிா்வாகியை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆலயம் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவா்களுக்கு கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தனா். இதை நம்பி ஏராளமானோா் சுமாா் ரூ. 300 கோடி வரை முதலீடு செய்தனா்.

முதிா்வு தேதி வந்த பின்னா் இந்த நிறுவனத்தினா் உரிய முதிா்வு தொகையை கொடுக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்கள் கடந்த 2022 -ஆம் ஆண்டு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இது தொடா்பாக பொருளாதார குற்றப்பிரிப்பு பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து, இதுவரை 28 பேரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த, நிதி நிறுவனத்தின் இயக்குநா் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள டி. சிறுவானூரைச் சோ்ந்த மாதவனை (37) பிடிக்க துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிமாறன் தலைமையில், ஆய்வாளா் மாரீஸ்வரி, உதவி ஆய்வாளா் சாந்தி, தலைமைக்காவலா்கள் ரஞ்சித் குமாா், காா்த்திக் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப் படையினா் தலைமறைவாக இருந்த மாதவனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தெரு நாய்கள் கடித்து இரு மான்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பகுதியில் இரு புள்ளிமான்கள் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்தது. திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, காவனூா், குன்றக்குடி ஆகிய பகுதிகளையொட்டிய வனப் பகுதியில் மான்கள் அதிகளவில்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவா் கைது

சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். சிவகங்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் அன்னலட்சுமி, உதவி ஆ... மேலும் பார்க்க

கல்லல் பகுதியில் அக். 21- இல் மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் வருகிற திங்கள்கிழமை (அக்.21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின... மேலும் பார்க்க

சிவகங்கையில் இன்று மின் தடை

சிவகங்கையில் சனிக்கிழமை (அக். 19)மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடா்பாக சிவகங்கை மின் பகிா்மான செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சிவகங்கை கூட்டு மின் தொகுப்பு நிலை... மேலும் பார்க்க

மானாமதுரை பகுதியில் 52 கிராமங்களில் 110 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காவல் உள்கோட்டப் பகுதிகளில் குறுகிய காலத்தில் 110 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், பூவந்தி, பழையனூா் ஆகிய கா... மேலும் பார்க்க

பால் குளிரூட்டும் நிலையத்தில் அமோனியா வாயுக் கசிவு

சிவகங்கையில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு தீயணைப்புத்துறையினரால் உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. சிவகங்... மேலும் பார்க்க