செய்திகள் :

பட்டம் பெரும் மாணவர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க வேண்டும்: ஏ.ஐ.சி.டி.சி தலைவா்

post image

ஒசூர்: இந்தியாவில் 1.75 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனம் புதியதாக தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. எனவே பட்டம் பெறும் மாணவர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க வேண்டும் என தொழில் நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் தலைவர் டாக்டர் டி.ஜி.சீதாராமன் தெரிவித்தார்.

ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் 33 ஆவது பட்டமளிப்பு விழா உள் விளையாட்டு அரங்கில் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் பானுமதி தம்பிதுரை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் தலைவர் டி.ஜி. சீதாராமன் பேசியதாவது:

இன்றைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக மாற்றம் பெற்று வருகிறது. ஒவ்வொரு மாணவர்களும் கல்வி மட்டுமின்றி தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். உலக அளவில் செயற்கை நுண்ணறிவு, ரொபேட்டிக், சாட். ஜி.பி.டி. உள்ளிட்ட 16 தொழில்நுட்ப அறிவை மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் வந்து கொண்டிருப்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய விண்வெளித்துறையில் சந்திராயன் திட்டத்தில் மகளிர் 30 சதவீதம் பேர் பணியாற்றி வருவது பாராட்டுக்குறியது. இந்தியாவில் உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் 28.5 சதவிகிதமாக உள்ளது. ஆனால் தென்கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் 95 சதவிகித மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர். 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையும் படிக்க |சொல்லப் போனால்... போராட்டங்களா? கொஞ்சம் பொறுங்கள்!

பெங்களூரு, ஒசூர் ஆகிய பகுதிகளில் நிறைய தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கிருக்கும் தொழிற்சாலைகளுடன் இணைந்து கல்லூரியில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க வேண்டும். அவர்கள் இறுதி ஆண்டு படிக்கும் பொழுது தொழிற்சாலை பயிற்சி முடிந்து முழுத் திறமையுடன் வெளியில் வேண்டும்.

இந்தியா பாதுகாப்பு துறை தடவாளங்களை இதுவரை இறக்குமதி செய்து வந்த நிலை மாறி தற்பொழுது ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இந்தியா முன்னேறி வருகிறது. சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல், கலை, அறிவியல் என பல்வேறு பாடப் பிரிவுகளில் மாணவர்கள் படித்தாலும் அனைவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிந்திருக்க வேண்டும்.

உலக அளவில் இந்தியாவில் 45 சதவிகித மக்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்தியாவில் தொழில்நுட்பத் துறை உச்சகட்டத்தில் உள்ளது. இதனை இந்திய மாணவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்த விழாவில் முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதியமான் கல்வி அறக்கட்டளை தலைவர் பானுமதி தம்பிதுரை,செயலாளர் லாசியா தம்பிதுரை, அறங்காவலர் நம்ரதா தம்பிதுரை, ஓலா நிறுவன முதன்மை செயல் அதிகாரி சிவக்குமார், அதியமான் கல்லூரி இயக்குனர் ஜி. ரங்கநாத் கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன்,வேளாங்கண்ணி குழுமத் தலைவர் கூத்தரசன் மற்றும் பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், தொழில் முனைவோர், பேராசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

நாகூர் சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடு: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

நாகூர் தர்காவின் சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்காவின் சந்தனக்கூடு திருவிழா வருகி... மேலும் பார்க்க

2026 பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை: 2026 பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.திமுக சட்டத்துறை மேற்கு மண்டலத்திற... மேலும் பார்க்க

மொழி, கலை இரண்டையும் கண் போன்று காக்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும் கலைக்கும் உண்டு. அந்த இரண்டையும் கண் போன்று காக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். முத்தமிழ்ப் பேரவை பொன்விழா ஆண்டு மற்றும் விருது... மேலும் பார்க்க

தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது: நிர்மலா சீதாராமன்

எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் கருத்து தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாளன்று பட்டய கணக்கர்(சி.ஏ)... மேலும் பார்க்க

திமுக கருணாநிதியின் குடும்ப கட்சி: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக கருணாநிதியின் குடும்ப கட்சி. அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் அந்த கட்சிக்கு தலைவராக முடியும், முதல்வராக முடியும். ஆனால், அதிமுகவில் உழைப்பவர்கள், விஸ்வாசமாக இருப்பவர்கள் கட்சியின் ப... மேலும் பார்க்க

அதிமுக நலனுக்காக தைரியமாக முடிவு எடுத்தவர் ஜானகி : ரஜினிகாந்த் புகழாரம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் எம்ஜிஆரின் மனைவியுமான ஜானகி நூற்றாண்டு விழாவை தான் வரவேற்பதாகவும், அதிமுக நலனுக்காக அரசியல் சரிபடாது என தைரியமாக முடிவு எடுத்தவர் ஜானகி என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் ச... மேலும் பார்க்க