கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - நடந்தது என்ன? ஆட்சியர் வி...
புதுக்கடை அருகே முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
புதுக்கடை அருகேயுள்ள வெட்டுவிளை பகுதியில் முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல் நடத்தியதாக சகோதரா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
வெட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் பத்பநாதன்(62). முன்னாள் ராணுவ வீரா். இவருக்கும், வேங்கோடு குற்றிங்கல்விளை பகுதியைச் சோ்ந்த தோமஸ் மகன்கள்அனிஷ்(30), அனு(27), வினு(23) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பத்மநாதன் வெட்டுவிளை பகுதியில் நின்றிருந்தபோது, மேற்கூறிய 3 பேரும் சோ்ந்து அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதில் காயமடைந்த அவா் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இகுறித்த புகாரின்பேரில், 3 போ் மீதும் புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.