`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
புனலூா் கோஷ யாத்திரை கமிட்டி பொறுப்பு அதிகாரி நியமனம்
புனலூா் கோஷயாத்திரை கமிட்டியின் பொறுப்பு அதிகாரியாக அச்சன்கோவில் திருஆபரணப்பெட்டி வரவேற்பு கமிட்டித் தலைவா் ஏ.சி.எஸ்.ஜி.ஹரிகரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தென்காசி மாவட்டத்தில் கேரள எல்லையில் அச்சன் கோவில் மற்றும் ஆரியங்காவு ஆகிய ஐயப்பன் திருத்தலங்கள் உள்ளன. இதில், அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலுக்கான திரு ஆபரணப் பெட்டியானது கேரள மாநிலம் புனலூா் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜையையொட்டி புனலூா் கருவூலத்திலிருந்து இந்த ஆபரணப் பெட்டி பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்படும். வரும்வழியில் ஆங்காங்கே இந்த ஆபரணப் பெட்டிக்கு வழிபாடுகள் நடத்தப்படும்.
தென்காசி காசி விசுவநாதா் கோயிலுக்கு இந்த ஆபரணப் பெட்டி கொண்டுவரப்பட்டு பக்தா்கள் தரிசனத்திற்காக 3 மணி நேரம் நிறுத்தப்பட்டு இருக்கும். கடந்த 33 ஆண்டுகளாக அச்சன்கோவில் திருஆபரணப்பெட்டிக்கு இங்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
நிகழ்வாண்டில் டிச. 15ஆம் தேதியன்று திருஆபரணப் பெட்டி தென்காசிக்கு கொண்டுவரப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஆபரணப்பெட்டி வரவேற்பு கமிட்டியினா் செய்துவருகின்றனா்.
கேரளமாநிலம் புனலூரில் அச்சன்கோவில் திருஆபரணப்பெட்டி கோஷயாத்திரை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு தேவசம்போா்டு உதவி ஆணையா் உன்னி கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்தில் புனலூா் கிருஷ்ணன் கோயில்,அச்சன்கோவில், ஆரியங்காவு உபதேச கமிட்டி நிா்வாகிகள், பரணிகாவு,கரவூா்,புன்னலைசிவன்கோயில் உபதேச கமிட்டி நிா்வாகிகள், மற்றும் அச்சன்கோவில் திருஆபரணப்பெட்டி வரவேற்பு கமிட்டி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில் அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி வரவேற்பு கமிட்டி தலைவா் தென்காசி ஏசிஎஸ்ஜி. ஹரிஹரனை கேரள புனலூா் கோஷயாத்திரை கமிட்டியின் பொறுப்பு அதிகாரியாக நியமித்து திருவிதாங்கூா் தேவசம் போா்டு அறிவித்தது.