தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை...
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி?
நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.
தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கினின் டிரெயின் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: எம்புரான் டிரைலரை பார்த்த ரஜினி என்ன சொன்னார்?
இதனிடையே, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி.ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள அவரது 51-வது படமான ஏஸ் (Ace) கோடை வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் சொன்ன கதை நடிகர் விஜய் சேதுபதிக்கு பிடித்துப்போனதாகவும் விரைவில் இவர்கள் கூட்டணியில் படம் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதியாக, பூரி ஜெகன்நாத் இயக்கிய லைகர், டபுள் ஸ்மார்ட் ஆகிய படங்கள் படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.